குவைத்தில் சிக்கி 9 மாதமாக அவதியுற்ற 32 பேர் தாயகம் திரும்பினர்

20 November 2020, 11:08 pm
Quick Share

திருச்சி: குவைத்தில் சிக்கி 9 மாதமாக அவதியுற்ற 32 பேர் விமானம் மூலம் திருச்சி வந்தனர்.

திருச்சி, ராமநாதபுரம், திருவாரூர், சிவகங்கை, துாத்துக்குடி, திருநெல்வேலி, தஞ்சாவுர், கள்ளக்குறிச்சி, தென்காசி, மதுரை, கடலுார் உள்ளிட்ட தமிழகத்தை சேர்ந்த 32 பேர் குவைத்து நாட்டில் வேலை செய்து வந்த நிலையில், கடந்த 9 மாதங்களாக கொரோனா பாதிப்பின் காரணமாக வேலையிழந்து வருமானமின்றி பெரும் சிரமத்திற்கு ஆளாகினர்.

கடந்த 9 மாதங்களாக சிக்கி தவித்து வந்தது. குறித்த தகவல் அறிந்த தமிழக அரசு மத்திய அரசு உதவியுடன் குவைத்தில் உள்ள இந்திய துாதரகத்தை தொடர்பு கொண்டு அவர்கள் மீண்டும் தாயகம் திரும்ப செய்ய முயற்சி எடுக்கப்பட்டது. இதன் விளைவாக 32 பேரும் இன்று விமானம் மூலம் திருச்சி வந்தடைந்தனர். திருச்சி விமான நிலையம் வந்த அவர்களுக்கு உணவு, குடிநீர் வழங்கி அரசு செலவில் அவரவர் சொந்த ஊருக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

Views: - 0

0

0