பெட்ரோல் பல்கில் பணத்தை திருடிய இளைஞர்கள் கைது: பொதுமக்கள் விரட்டி பிடித்து காவல் நிலையத்தில் ஒப்படைப்பு

5 February 2021, 10:24 pm
Quick Share

விருதுநகர்: காரியாபட்டி பெட்ரோல் பல்கில் பணத்தை திருடிய இளைஞர்களை பொதுமக்கள் விரட்டி பிடித்து காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர்.

விருதுநகர் மாவட்டம், காரியாபட்டி, பெரியார்நகரில் உள்ள எச்.பி பெட்ரோல் பங்கில் இன்று காலை இருசக்கர வாகனத்திற்கு பெட்ரோல் நிரப்புவதற்காக, விருதுநகர் ,ரோசல்பட்டி, காந்திநகரைச் சேர்ந்த அழகர் மற்றும் வெற்றிவேல் ஆகிய இரண்டு இளைஞர்கள் வந்துள்ளனர். அப்பொழுது பெட்ரோல் பல்கில் வேலை பார்க்கும் ஊழியர் தனது கேஸ் பேக்கில் பணம் அதிகமாக இருப்பதால் உரிமையாளரிடம் கொடுப்பதற்காக மிஷின் மேல் பகுதியில் பணத்தை வைத்து விட்டு அங்கிருந்த வாகனங்களுக்கு பெட்ரோல் நிரப்பி உள்ளார். இதனை பார்த்துக் கொண்டிருந்த இளைஞர்கள் இருவரும் சிறிது நேரம் அங்குமிங்கும் உலாவிய படி நோட்டமிட்டவர்கள் திடீரென கண்ணிமைக்கும் நேரத்தில் பணத்தை எடுத்துக்கொண்டு இருசக்கர வாகனத்தில் தப்பி ஓட முயன்றனர்.

இதனைப் பார்த்த ஊழியர் விரட்டிச் சென்று பணத்தை திருடிய இளைஞர்களை பிடித்துள்ளார். அதில் ஒருவர் தப்பி ஓட முயன்றதை தொடர்ந்து அருகில் இருந்த பொதுமக்கள் காரியாபட்டி காவல் நிலையத்திற்கு தகவல் அளித்தனர். உடனடியாக சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் பொதுமக்களின் உதவியுடன் தப்பி ஓடிய திருடனை பிடித்து இருவரையும் காவல் நிலையத்துக்கு கொண்டு சென்று விசாரணை செய்தனர். விசாரணையில் அவர்கள் வந்த இருசக்கர வாகனம் நேற்று மதுரை மாவட்டம் உத்தங்குடி பகுதியில் திருடப்பட்டதாக கூறியுள்ளனர். மேலும் அவர்கள் மீது பல்வேறு திருட்டு வழங்குகள் நிலுவையில் இருந்தது தெரியவந்தது. இரண்டு இளைஞர்கள் மீது காரியாபட்டி காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Views: - 18

0

0