சரக்கு வாகனம் மோதிய பேரூராட்சி டெங்கு பணியாளர் உயிரிழப்பு…

7 September 2020, 5:26 pm
Quick Share

திருவள்ளூர்: ஆரணி பேரூராட்சி டெங்கு பணியாளர் காய்கறி ஏற்றி செல்லும் சரக்கு வாகனம் மோதியதில் உயிரிழந்தார்.

திருவள்ளூர் மாவட்டம் ஆரணி பகுதியை சேர்ந்தவர் கார்த்திக். இவரது மனைவி பரிமளா ஆரணி பேரூராட்சியில் சுகாதார டெங்கு பணியாளராக பணிபுரிந்து வந்தார். இவர் தனது வீட்டில் இருந்து நடந்து பணிக்கு சென்றபோது ஆரணி சந்தையில் காய்கறி விற்பனை செய்து விட்டு பெரியபாளையம் நோக்கி சென்ற சரக்கு வாகனம் மோதி விபத்துக்குள்ளானதில் படுகாயமடைந்தார். இதையடுத்து அவரை பொன்னேரி அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு அனுப்பி வைத்தபோது பரிதாபமாக உயிரிழந்தார்.

இந்த விபத்து குறித்து தகவல் அறிந்து வந்த ஆரணி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு தப்பியோடிய ஓட்டுநரை தேடி வருகின்றனர். வேகமாக சரக்கு வாகனம் நிலைதடுமாறி இவர் மீது மோதி கட்டபாட்டை இழந்து சாலையோர பள்ளத்தில் தலைகீழாக கவிழ்ந்தது விசாரணையில் தெரியவந்தது. ஆரணி பேரூராட்சியில் டெங்கு பணியாளராக பணிபுரிந்த பரிமளா விபத்தில் சிக்கி உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Views: - 0

0

0