குடும்ப பிரச்சினையில் தாய் வீட்டிற்கு சென்ற மனைவி: மன உளைச்சலில் கணவன் தூக்கிட்டு தற்கொலை

21 September 2020, 11:27 pm
Quick Share

திருவள்ளூர்: கும்மிடிப்பூண்டி அருகே குடும்ப பிரச்சனை காரணமாக மனைவி தாய் வீட்டிற்கு சென்றதால் கணவன் மன உளைச்சலில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது..

திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி அருகே பெரவள்ளூரில் பஞ்சர் கடை நடத்தி வருபவர் ராஜீவ்காந்தி. இவருக்கு திருமணமாகி தமிழரசி என்ற மனைவியும், 2 மகன்களும் உள்ளனர். இந்த நிலையில் வீட்டில் குடும்ப பிரச்சினை காரணமாக மனைவி கடந்த சில மாதங்களாக அவரது தாய் வீட்டில் உள்ளார். மனைவியை பிரிந்து தனியாக வசித்து வந்ததால் மன உளைச்சலில் இருந்த அவர் அவரது கடை அருகில் இருந்த சரக்கு வாகனத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

இதையறிந்த அப்பகுதி மக்கள் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். அதன்பேரில் சம்பவ இடத்திற்கு வந்த கவரப்பேட்டை போலீசார் உடலை மீட்டு பொன்னேரி அரசு மருத்துவமனைக்கு பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பிவைத்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். குடும்ப பிரச்சனை காரணமாக மனைவி தாய் வீட்டிற்கு சென்றதால் மன உளைச்சலில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது..

Views: - 10

0

0