20 சதவீத இட ஒதுக்கீடு வன்னியர்களுக்கு வழங்க வலியுறுத்தி பாமகவினர் அறவழி போராட்டம்

29 January 2021, 3:34 pm
Quick Share

திருவள்ளூர்: கல்வி வேலைவாய்ப்பில் 20 சதவீத இட ஒதுக்கீடு வன்னியர்களுக்கு வழங்க வலியுறுத்தி திருவள்ளூர் ஆட்சியர் அலுவலகம் அருகே பாமகவினர் அறவழி போராட்டத்தில் ஈடுபட்டனர்.

திருவள்ளூரில் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில் ஆறாம் கட்டமாக கல்வி வேலைவாய்ப்பில் 20% இட ஒதுக்கீடு வன்னியர்களுக்கு வழங்க கோரி பாட்டாளி மக்கள் கட்சி மற்றும் வன்னியர் சங்கம் சார்பில் அறவழிப் போராட்டம் நடைபெற்றது. இதில் வழக்கறிஞர் பாலு, மாநில பொதுச் செயலாளர் பிரகாஷ், கேஎன் சேகர் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பங்கேற்றதால் பாதுகாப்பிற்காக 500க்கும் மேற்பட்ட போலீசார் குவிக்கப்பட்டு கலவரத் தடுப்பு தண்ணீர் பீய்ச்சி அடிக்கும் ரியாட் வாகனம் தயார் நிலையில் வைக்கப்பட்டது. போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் பின்னர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு அவர்கள் பேரணியாக சென்று மாவட்ட வருவாய் அலுவலரிடம் கோரிக்கை மனுவினை வழங்கினர்.

Views: - 0

0

0