துணிக்கடையில் துணிகர கொள்ளை: 1 லட்சம் ரூபாய் மதிப்பிலான ஆயத்த ஆடைகளை திருடிய 3 பேர் கைது

10 August 2020, 1:57 pm
arrest_pfi_up_police_updatenews360
Quick Share

திருவள்ளூர்: பொன்னேரியில் உள்ள துணிக்கடையில்1 லட்சம் ரூபாய் மதிப்பிலான ஆயத்த ஆடைகளை திருடிய 3 பேரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி புதிய தேரடி தெரு பேருந்து நிலையம் எதிரில் துணி கடை நடத்தி வருபவர் ஜாபர். இவர் நேற்று முன்தினம் இரவு கடையை பூட்டிவிட்டு சென்றனர். பூட்டு உடைக்கப்பட்டு சத்தம் கேட்டு அருகில் வசிப்பவர்கள் பொன்னேறி காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். மர்ம நபர்கள் ஜாபர் கடையிலிருந்து ஒரு லட்சம் ரூபாய் மதிப்பிலான துணிகளை திருடி கொண்டு வெளியில் வந்த நபர்கள் போலீசாரை கண்டதும் துணிகளை அங்கேயே போட்டு விட்டு தப்பி ஓடிய போது காவல்துறையினர் அவர்களை விரட்டி சென்று மடக்கி பிடித்தனர்.

அதில் பெரியகாவனத்தை சேர்ந்த தினேஷ், முத்துக்குமார், அசாருதீன் ஆகிய 3 பேரை கைது செய்தனர். கடையில் திருடுவதற்கு முன்னர் மூன்று பேரும் மது அருந்திவிட்டு பின்னர் கொள்ளையில் ஈடுபட்டு சிக்கியது விசாரணையில் தெரியவந்தது. தினேஸை மட்டும் கைது செய்து சிறையில் அடைத்த போலீசார் மற்ற இருவரையும் சிறார் சீர்திருத்த சிறைக்கு அனுப்பிவைத்தனர்.

Views: - 1

0

0