பணி நியமன ஒப்புதல் ஆணை அளித்து ஊதியம் வழங்க வலியுறுத்தல்: தூத்துக்குடி மாவட்ட முதன்மை கல்வி அலுவலரை ஆசிரியர்கள் முற்றுகை….

Author: Udhayakumar Raman
25 September 2021, 5:53 pm
Quick Share

தூத்துக்குடி மாவட்டத்தில் 2015 மற்றும் 2018 ஆம் ஆண்டு முதல் அரசு உதவி பெறும் மேல்நிலைப் பள்ளிகளில் பணிபுரிந்து வரும் 32 முதுகலை ஆசிரியர்கள் மற்றும் 20 அலுவலகப் பணியாளர்களுக்கு பணி நியமன ஒப்புதல் ஆணை அளித்து ஊதியம் வழங்க வலியுறுத்தி மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் பாலதண்டாயுதபாணி ஆசிரியர்கள் முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதில் தமிழ்நாடு முதுநிலை பட்டதாரி ஆசிரியர் கழகத்தினர், தமிழ்நாடு மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் கழகத்தினர், தமிழ்நாடு உயர்நிலை மேல்நிலை பட்டதாரி ஆசிரியர் கழகத்தினர்,

தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி மற்றும் தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கம், தமிழ்நாடு கணினி ஆசிரியர் சங்கம், தமிழ்நாடு உடற்கல்வி ஆசிரியர் சங்கம், இந்திய மாணவர் சங்கத்தின் நிர்வாகிகள் உள்ளிட்ட நூற்றுக்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டு பணி நியமன ஒப்புதல் ஆணை அளித்து ஊதியம் வழங்கிட வலியுறுத்தி கோஷங்களை எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அப்பொழுது அவர்களுடன் சமரச பேச்சுவார்த்தையில் ஈடுபட வந்த மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் பாலதண்டாயுதபாணியை முற்றுகையிட்டு ஆசிரியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்,

இதனால் பரபரப்பு ஏற்பட்டது. இதைத்தொடர்ந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தென்பாகம் காவல் நிலைய போலீசார் அவர்களுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் உடன் கலந்துரையாடல் செய்து இப்பிரச்சனைக்கு தீர்வு காணப்படும் என உறுதி அளித்ததை தொடர்ந்து போராட்டத்தை கைவிட்டு ஆசிரியர்கள் கலைந்து சென்றனர்.

Views: - 46

0

0