குற்றப் பின்னணியில் உள்ளவர்கள் காங்கிரசில் தான் அதிகம் உள்ளார்கள்: சாமிநாதன் குற்றச்சாட்டு

25 January 2021, 8:23 pm
Quick Share

புதுச்சேரி: குற்றப் பின்னியில் உள்ளவர்கள் காங்கிரஸில் தான் அதிகம் உள்ளார்கள் என்று புதுச்சேரி பா.ஜ.க தலைவர் சாமிநாதன் குற்றச்சாட்டியுள்ளார்

புதுச்சேரி மாநில பாஜக தலைவர் சாமிநாதன் பாஜக மாநில தலைமை அலுவலகத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் வருகின்ற 31 ஆம் தேதி ஜெ.பி.நட்டா தலைமையில் பொதுகூட்டம நடைபெற உள்ளது என்றும் புதுச்சேரியில் வருகின்ற 2021 சட்டமன்ற தேர்தலில் புதுச்சேரியில் பா.ஜ.க அனைத்து தொகுதிகளிலும் வெற்றி பெறும் என்றும் அதேபோல் 2021 புதுச்சேரியில் ஆட்சி அமைய அனைத்து யூகங்களையும் பா.ஜ.க தலைமை வகுத்து வருகின்றது என்றும் நாராயணசாமி மத்திய மாநில அரசின் திட்டங்களையும் நிறைவேற்ற தவிரிவிட்டதாக தெரிவித்தார்,

மேலும் முதல்வர் நாராயணசாமி பா.ஜ.க வில் குண்டர்கள் தான் அதிகம் இனைகிறார்கள் என கூறியதற்கு பதில் அளித்த அவர், பா.ஜ.க எந்த கட்சி தலைவரையும் மிரட்டவில்லை என்றும் குற்ற பின்னனி உள்ளவர்கள் பா.ஜ.க இதுவரை சேர்கவில்லை அதே போல் அவர்களுக்கு எந்த பொறுப்பும் பா.ஜக அளிக்க வில்லை எனவும் பயத்தின் காரனமாக நாராயணசாமி பேசி வருகிறார் என கூறிய அவர் இதுவரை புதுச்சேரி பா.ஜ.க தலைவர், செயலாளர் ஆகிய யார் மீதும் எந்த வழக்கும் இல்லை என்றும்,

குற்ற பின்னனி உள்ளவர்கள் அதிகம் காங்கிரஸில் கட்சியில் தான் உள்ளார்கள் என குற்றம் சாட்டினார் தொடர்ந்து பேசிய அவர் காங்கிரசில் இருந்து ராஜினமா செய்த அமைச்சர் நமச்சிவாயம் மற்றும் சட்டமன்ற உறுப்பினர் தீப்பாய்ந்தான் பா.ஜ.கவிற்கு வருவதற்கு எப்போதும் பா.ஜ.க கதவு திறந்து இருக்கும் அதே போல் ராகுல் காந்தி கூட நாளை வந்து பா.ஜ.க வில் சேரலாம், பா.ஜ.கவின் கதவு எப்போதும் திறந்து இருக்கும் என்றும் புதுச்சேரியில் 30 தொகுதியிலும் காங்கிரஸ் தோல்வி அடையும் எனவும் தெரிவித்தார்.

Views: - 5

0

0