இருசக்கர வாகனத்தில் வந்த மர்ம நபர்களால் திமுக பிரமுகர் சரமரியாக வெட்டிக் கொலை
3 February 2021, 1:44 pmதிருவள்ளூர்: வெள்ளவேடு பகுதியில் இருசக்கர வாகனத்தில் வந்த மர்ம நபர்களால் திமுக பிரமுகர் சரமரியாக வெட்டிக் கொலை செய்த சம்பவம் குறித்து வெள்ளவேடு காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
திருவள்ளூர் மாவட்டம் வெள்ளவேடு பகுதியில் முன்பகை காரணமாக பூந்தமல்லி திமுக மேற்கு ஒன்றிய துணைச் செயலாளர் கருணாகரன் இருசக்கர வாகனத்தில் வந்த மர்மநபர்களால் சரமாரியாக வெட்டி தப்பிச் சென்றனர். இதில் நிலைகுலைந்து சம்பவ இடத்திலேயே கருணாகரன் உயிரிழந்தார். இது குறித்து வெள்ளவேடு காவல்துறையினருக்கு அளிக்கப்பட்ட தகவலின் அடிப்படையில் விரைந்து வந்த காவல்துறையினர் சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.
மேலும் ஏற்கனவே கடந்த சில வருடங்களுக்கு முன்பு மேல்மனம் பேடு திமுக ஊராட்சி மன்ற தலைவர் தங்கராஜ் என்பவரை வெட்டிக் கொலை செய்த சம்பவத்தை தொடர்ந்து அதே பகுதியை சேர்ந்த அவரது மைத்துனர் கருணாகரன் தற்போது மர்ம கும்பலால் வெட்டிக் கொலை செய்த சம்பவம் திருப்பதி தேசிய நெடுஞ்சாலையில் நடந்துள்ளதால் எடுக்கப்படும் என்று தெரிவித்தார். இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
0
0