இருசக்கர வாகனத்தில் சென்ற வயது முதிர்ந்த தம்பதியினரிடம் செயினை பறிக்க முயன்ற 3 பேர் கைது
26 September 2020, 8:42 pmசென்னை: மாதவரத்தில் இருசக்கர வாகனத்தில் சென்ற வயது முதிர்ந்த தம்பதியினரிடம் செயினை பறிக்க முயன்ற 3 பேரை போலீசார் கைது செய்தனர்.
சென்னை மாதவரத்திலிருந்து , மணலி புது நகர் நோக்கி ராஜி, யமுனா வயது முதிர்ந்த தம்பதிகள் தங்களது உறவினர் வீட்டிலிருந்து இரு சக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தனர். அப்போது மஞ்சம்பாக்கம் வழியாக சென்ற போது , பின்னால் தொடர்ந்து இரு சக்கர வாகனத்தில் வந்த 3 பேர் கொண்ட மர்ம கும்பல் யமுனா அணிந்திருந்த செயினை பறிக்க முயன்றுள்ளனர். கொள்ளையர்க ளின் முயற்சி வீணாகி போனதால், கோபத்தில் வயதான தம்பதிகளை இருவரையும் கீழே தள்ளி விட்டு சென்றுள்ளனர்.
இதனால் பலத்த காயம் ஏற்பட்டதால், தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். இச்சம்பவம் குறித்து மாதவரம் பால்பண்ணை நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. புகாரின் அடிப்படையில் குற்றவாளிகளை பிடிக்க 2 தனிப்படைகள் அமைக்கப்பட்டது. மேலும் அப்பகுதியில் உள்ள சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்த போலீசார் , குற்றச் சம்பவத்தில் ஈடுபட்டதாக சதிஷ்குமார் (21) , ஹரிஷ்குமார் (19) , சிறுவன் உட்பட 3 பேரை காவல் துறையினர் கைது செய்தனர். இவர் மீது ஏற்கனவே பல வழக்குகள் நிலுவையில் உள்ளது குறிப்பிடத்தக்கது.