சாலையில் சென்ற குடும்பத்தினரை தாக்கி , கத்தியை காட்டி செல்போன் பறிக்க முயன்ற வழக்கில் 3 பேர் கைது

20 November 2020, 10:30 pm
Quick Share

சென்னை: வியாசர்பாடி அருகே சாலையில் சென்ற குடும்பத்தினரை தாக்கி, கத்தியை காட்டி செல்போன் பறிக்க முயன்ற வழக்கில் 3 பேரை போலீசார் கைது செய்தனர்.

சென்னை வியாசர்பாடி பெரம்பூர் பகுதியை சேர்ந்தவர் ஸ்ரீதர் வயது 43 இவரது மனைவி சுவாதி மற்றும் 6 வயது மகள் சுருதி ஆகிய 3 பேரும் இருசக்கர வாகனத்தில் வியாசர்பாடியில் உள்ள சுவாதியின் அம்மா வீட்டிற்கு சென்றுள்ளனர். அப்போது வியாசர்பாடி ஜீவா ரயில் நிலையம் அருகே செல்லும் போது இரு சக்கர வாகனத்தில் வந்த மூன்று பேர் ஸ்ரீதரை தாக்கி கீழே தள்ளி அவரது செல்போனை பறிக்க முயன்றுள்ளனர். அதற்குள் அக்கம் பக்கத்தினர் ஓடிவந்து மர்ம நபர்களை அடித்து விரட்ட, அவர்கள் சென்று விட்டனர்.

கீழே விழுந்ததில் ஸ்ரீதருக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டு , 7 தையல் போடப்பட்டது மற்றும் அவரது மனைவி மகளுக்கும் லேசான காயம் ஏற்பட்டது. அங்கிருந்து தப்பிச் சென்ற மூன்று பேரும் வியாசர்பாடி ஜீவா பகுதியில் உள்ள மதுபான கடையில் மது அருந்தி விட்டு அந்த பகுதியாக சென்ற ஒருவரிடம் வழிப்பறியில் ஈடுபட்டு உள்ளனர். இது குறித்து போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. வியாசர்பாடி போலீசார் அசோக் பில்லர் அருகே வாகன சோதனையில் ஈடுபட்டிருந்த போது சந்தேகத்திற்கு இடமாக வந்த 3 நபர்களை பிடித்து விசாரித்ததில்,

வழிப்பறி மற்றும் செல்போன் பறிப்பு முயற்சியில் ஈடுபட்டது இவர்கள் தான் என தெரிய வந்தது. இதனை அடுத்து அவர்களை காவல் நிலையம் அழைத்துச் சென்று விசாரித்ததில், திருவெற்றியூர் பகுதியை சேர்ந்த சய்யத்  அஸ்வத், புளியந்தோப்பு பகுதியைச் சேர்ந்த முகமது இசாக் மற்றும் துவாரகநாத் ஆகிய 3 பேர் என தெரிய வந்தது. இவரிடமிருந்து ஒரு கத்தி மற்றும் ஒரு இருசக்கர வாகனம் ஒரு செல்போன் ஆகியவற்றை பறிமுதல் செய்த போலீசார் இவர்களிடம் தொடர்ந்து விசாரனை நடத்தி வருகின்றனர்.

Views: - 20

0

0