பேருந்து நிலையத்தில் கஞ்சா விற்பனை செய்த சிறுவர்கள் உள்ளிட்ட 3 பேர் கைது

Author: kavin kumar
14 August 2021, 8:59 pm
Quick Share

அரியலூர்: அரியலூர் பேருந்து நிலையத்தில் கஞ்சா விற்பனை செய்த சிறுவர்கள் உள்ளிட்ட 3 பேர் கைது செய்யப்பட்டனர்.

அரியலூர் பேருந்து நிலையத்தில் கஞ்சா விற்பனை செய்யபடுவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதனையடுத்து பேருந்து நிலையம் மற்றும் பேருந்துகளில் போலீசார் சோதனையில் ஈடுபட்டனர். அப்போது பேருந்து நிலையத்தில் கஞ்சா விற்பனை செய்த திருச்சி ராம்ஜீநகரை சேர்ந்த ஜெயக்குமார் மற்றும் 16 வயதுடைய சிறுவர்களை போலீசார் மடக்கி பிடித்தனர். பின்னர் இதுகுறித்து விசாரணை செய்ததில் செல்போன் உதிரிபாகங்கள் விற்பனை செய்வதுபோல கஞ்சா விற்பனை செய்தது தெரியவந்தது. இதனையடுத்து அவர்களிடம் இருந்த 12 பாக்கெட் கஞ்சா பொட்டலங்களை பறிமுதல் செய்த போலீசார் இன்று ஜெயக்குமார் உள்ளிட்ட 3 பேரையும் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Views: - 195

0

0