இளைஞர் கொலை செய்யப்பட்ட வழக்கு… மூன்று பேர் ஒசூர் நீதிமன்றத்தில் சரண்

4 August 2020, 6:34 pm
Quick Share

கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரியில் நேற்று சாலையிலேயே ஒருவர் கொலை செய்யப்பட்ட வழக்கில் மூன்று பேர் ஒசூர் நீதிமன்றத்தில் சரண் அடைந்தனர்.

கிருஷ்ணகிரி நகரின் மையப்பகுதியிலேயே நேற்று பவுன்ராஜ்(28) என்கிற இளைஞர் நடுசாலையிலேயே இரத்த வெள்ளத்தில் கொலை செய்யப்பட்டிருந்தார். இந்த வழக்கு கிருஷ்ணகிரி நகர காவல்நிலைய போலிசார் விசாரணை மேற்க்கொண்டு வரும்நிலையில், இன்று அகில் (எ) அகிலன்(24), ஜகா (எ) ஜகதீசன்(25), தர்சா (எ) டென்டுல்கர்(19) ஆகிய மூவரும் ஓசூர் இரண்டாவது நடுவர்நீதிமன்றத்தில் சரணடைந்தனர். வழக்கின் முக்கிய குற்றவாளியான வாஞ்சி(எ) சதீஷ் இன்று காலை கைது செய்யப்பட்டார். இந்த கொலைக்கான காரணம் இதுவரை தெரியாத நிலையில் சரணடைந்த மூவரும் கிருஷ்ணகிரி கிளை சிறைக்கு அழைத்து செல்லப்பட்டுள்ளனர். கிருஷ்ணகிரியில் கொலை செய்து ஓசூரில் சரணடைந்த சம்பவம் பரபரப்பை ஏற்ப்படுத்தி உள்ளது.

Views: - 13

0

0