நூதன முறையில் இந்திய மாணவர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்

15 September 2020, 3:25 pm
Quick Share

விருதுநகர்: நீட் தேர்வை ரத்து செய்ய கூறி கண்களில் கருப்பு துணியை கட்டிக்கொண்டும் ஸ்டெதால்கோப்பை தூக்கில் தொங்க விட்டவாறு நூதன முறையில் இந்திய மாணவர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

கடந்த சில நாட்களாக தமிழகத்தில் நீட் தேர்வுக்கு தயாராகி வந்த மாணவர்கள் நீட் தேர்வு அச்சத்தால் தற்கொலை செய்து கொண்டனர். இதனால் தமிழகத்தில் நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும் என பல அரசியல் கட்சிகளும் சமூக ஆர்வலர்களும் மாணவர்களும் போராடி வருகின்றனர். இதன்படி விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இந்திய மாணவர் சங்கத்தினர் தமிழகத்தில் நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும் எனக் கோரி நூதன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்ட இந்திய மாணவர் சங்கத்தினர் தங்கள் கண்களில் கருப்பு துணியை கட்டிக்கொண்டும் ஸ்டெதாஸ்கோப்பை தூக்கில் தொங்க விட்டவாறு நீட் தேர்வுக்கு எதிராகவும், மத்திய, மாநில அரசுக்கு எதிராகவும் கோஷங்களை எழுப்பினர். நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும், கல்வியை மாநிலப் பட்டியலுக்கு மாற்றம் மாற்ற வேண்டும் போன்ற கோரிக்கைகளை வலியுறுத்தி கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஆர்ப்பாட்டத்தில் 30க்கும் மேற்பட்ட இந்திய மாணவர் சங்கத்தினர் சேர்ந்தவர்கள் கலந்துகொண்டனர்.