தொடர் திருட்டு சம்பவங்களில் ஈடுபட்ட மேலும் 3 பேர் மீது குண்டர் சட்டம்

29 October 2020, 10:07 pm
Quick Share

அரியலூர்; தொடர் திருட்டு சம்பவங்களில் ஈடுபட்ட மேலும் 3 பேரை குண்டர் சட்டத்தில் கைது செய்ய மாவட்ட ஆட்சியர் ரத்னா அதிரடி உத்தரவிட்டுள்ளார்.

கடந்த 08.10.2020 அன்று அரியலூர் நகர பகுதியில், பெரம்பலூர் ரோட்டில் உள்ள காளியம்மன் கோயிலுக்கு அருகே உள்ள சக்தி டிரேடர்ஸ் என்ற சைக்கிள் எலக்ட்ரிக்கல் கடையில் நள்ளிரவில் மூன்று நபர்கள் கடையின் பூட்டை உடைத்து திருடினர். இதில் ஈரோட்டைச் சேர்ந்த கிருஷ்ணமூர்த்தி, ராமநாதபுரத்தைச் சேர்ந்த செல்வராஜ், கடலூரைச் சேர்ந்த சிவப்பிரகாசம் ஆகியோரை அரியலூர் நகர காவல்துறையினர் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

இந்நிலையில் மேற்படி குற்றவாளிகள் மீது ஏராளமான திருட்டு வழக்குகள் நிலுவையில் இருப்பதாலும், மேலும் குற்றச் சம்பவங்களில் ஈடுபடாமல் இருக்க குற்றவாளிகளை குண்டர் தடுப்பு சட்டத்தில் சிறையில் அடைக்க அரியலூர் மாவட்ட எஸ்பி ஸ்ரீனிவாசன் பரிந்துரையின் பேரில் மாவட்ட ஆட்சியர் ரத்னா குற்றவாளிகளை குண்டர் சட்டத்தில் அடைக்க அதிரடி உத்தரவிட்டார். இன்று மட்டுமே மனைவியை கொன்ற கணவன், தொடர் திருட்டில் ஈடுபட்ட திருடர்கள் என நான்கு பேர் குண்டர் சட்டத்தில் கைது செய்யபட்டுள்ளது குறிப்பிடதக்கது.

Views: - 16

0

0