பழங்குடியின பெண்ணை தாக்கி கொன்ற புலி: அதிநவீன கேமரா மூலம் புலியைக் கண்டு பிடிக்க வனத்துறையினர் தீவிரம்…

3 September 2020, 5:36 pm
Quick Share

நீலகிரி: பழங்குடியின பெண்ணை தாக்கி கொன்ற புலியை கண்டறிய சென்சார் மூலம் வனவிலங்குகளை கண்டறியும் தானியங்கி கேமராக்கள் பொருத்தி கண்காணிப்பு பணியில் வனத்துறையினர் ஈடுபட்டுள்ளனர்.

கூடலூரை அடுத்துள்ள மசினகுடி பேருராட்ச்சிகுட்பட்ட பகுதியில் வசிப்பவர் மாதன் இங்குள்ள குறும்பர் பாடி பகுதியில் வசிக்கும் மாதன் மற்றும் அவரது மனைவி கவுரி 50 இருவரும் சிங்காரா சாலை வைல்ட பிரிட்ஜ் பகுதியில் மேய்ச்சல் நிலத்தில் மாடுகளை மேய்க்கச் சென்று உள்ளனர். வனப் பகுதியின் உள்ளே மாடுகளை மேய்த்துக் கொண்டிருந்தபோது திடீரென புலி ஒன்று கௌரியை தாக்கி கழுத்தை பிடித்து இழுத்துச் சென்றுள்ளது. இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த கணவர் அதன் பின்னால் ஓடியுள்ளார். தொடர்ந்து அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள் மூலமாக மசினகுடி பகுதியில் காவல்துறை மற்றும் வனத்துறைக்கு தகவல் கிடைத்துள்ளது.

சம்பவ பகுதிக்கு விரைந்த வனத்துறையினர் மற்றும் காவல்துறையினர் புலி தாக்கிய பகுதிகளில் இருந்து சுமார் ஒரு கிலோமீட்டர் தூரத்துக்கு அப்பால் கௌரியின் இறந்த உடலை மீட்டு உள்ளனர். பின்னர் உடல் கூடலூர் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக கொண்டு செல்லப்பட்டது. அந்தப் புலியால் வேறு ஏதேனும் அசம்பாவிதம் நடக்காமல் இருக்க 15 தானியங்கி கேமராக்கள் பொருத்தி கண்காணிப்பு பணியில் வனத்துறையினர் ஈடுபட்டனர்.

இந்த கேமராக்களில் புலி பதிவாகாத நிலையில் முதுமலை முதுமலையில் வன விலங்குகளை துல்லியமாக சென்சார் மூலம் கண்டறியும் அதிநவீன கேமரா வரவழைக்கப்பட்டு முதல் நாளில் 8 கிலோ மீட்டர் சுற்றளவில் ஒளிப்பதிவு செய்யப்பட்டுள்ளனர். தொடர்ந்து கேமரா மூலம் புலி வேறு எங்காவது உள்ளதா அல்லது வனப்பகுதிக்குள் வேறு பகுதிக்கு சென்று விட்டதா என்பது பற்றி கண்காணிக்கும் கண்காணிப்பு நடத்தப்படும் என வனத்துறையினர் தெரிவித்துள்ளனர்.

Views: - 0

0

0