வால்பாறை சாலையில் ராஜநடை போட்ட புலி: இணையத்தில் வைரலாகும் வீடியோ!!
Author: Rajesh31 ஜனவரி 2022, 1:51 மணி
கோவை: வால்பாறை சாலையில் புலி ஒன்று கம்பீர நடையுடன் உலா வரும் வீடியோ இணையத்தில் வெளியாகியுள்ளது.
கோவை மாவட்டம் ஆனைமலை புலிகள் காப்பகத்திற்குட்பட்ட வனப்பகுதிகளில் புலி, சிறுத்தை, யானை, கரடி, செந்நாய் காட்டெருமை உள்ளிட்ட பல்வேறு வனவிலங்குகள் அதிக அளவில் காணப்படுகிறது.
இந்நிலையில் சில தினங்களுக்கு முன்பு பெங்களூரிலிருந்து வால்பாறை வந்திருந்த சுற்றுலா பயணிகள் திரும்பி சென்று கொண்டிருந்த போது கவர்க்கல் பகுதியில் உள்ள சாலையில் ராஜநடையில் ஒரு புலி நடந்து சென்று தாவி வனப்பகுதிக்குள் சென்றுள்ளது.
அதை ஒரு புகைப்படக்காரர் படம்பிடித்துக் சென்று அனுப்பியுள்ளார். அந்த வீடியோ காட்சி தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. அந்த வீடியோ சமூக வலைதளங்களில் தற்போது வேகமாக பரவி வருகிறது.
Views: - 2033
0
0