பசுமாட்டை அடித்துக் கொன்ற புலி:புலியை கூண்டு வைத்து பிடிக்க கிராம மக்கள் கோரிக்கை…

Author: Udhayakumar Raman
19 September 2021, 1:51 pm
Quick Share

நீலகிரி: கூடலூர் அருகே கிராம பகுதியில் பசுமாட்டை அடித்துக் கொன்ற புலியால் பொதுமக்கள் மிகுந்த பீதி அடைந்துள்ளனர்.

கூடலூர் அருகே ஸ்ரீமதுரை அம்பலமூலா பகுதியில் கடந்த சில நாட்களாக புலி நடமாட்டம் இருந்து வருகிறது. கடந்த இரு மாதங்களில் மட்டும் சுமார் 6 க்கும் மேற்பட்ட பசுமாடுகளை புலி அடித்துக் கொன்றுள்ளது. இந்நிலையில் நேற்று அதே பகுதியில் கொட்டகையில் கட்டியிருந்த பசு மாட்டை புலி தாக்கி கொன்றது இதனால் அப்பகுதி மக்கள் மிகுந்த அச்சத்தோடு இருந்து வருகின்றனர். ஏற்கனவே இதுபற்றி வனத்துறை அமைச்சரிடம் முறையிட்டும் வனத்துறை அமைச்சர் அதற்கென தனி குழு அமைக்கப்பட்டு புலியை கூண்டு வைத்து பிடிக்க கூறியிருந்த நிலையில் மீண்டும் இந்த பகுதியில் புலியின் அட்டகாசம் தொடர்ந்துள்ளது எனவே வனத்துறையினர் புலியை கூண்டு வைத்து பிடிக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர். புலியின் நடமாட்டத்தால் பொதுமக்கள் வெளியே சென்றுவர மிகுந்த அச்சம் அடைந்துள்ளதாக கிராம மக்கள் வேதனை தெரிவித்துள்ளனர்.

Views: - 70

0

0