பகல் நேரங்களில இயக்கப்படும் பேருந்துக்களின் நேரம் அறிவிப்பு

20 April 2021, 6:25 pm
Quick Share

திருச்சி: திருச்சியில் இருந்து பகல் நேரங்களில இயக்கப்படும் பேருந்துக்களின் அட்டவணையை மாவட்ட ஆட்சியர் வெளியிட்டுள்ளார்.

தமிழகத்தில் 2வது கொரனா தொற்று பரவலை கட்டுப்படுத்தும் வகையில இன்று முதல் இரவு ஊரடங்கு உத்தரவை தமிழக அரசு அறிவித்துள்ளது. இது குறித்து திருச்சி மாவட்ட ஆட்சியர் திவ்யதர்ஷினி வெளியிட்டுள்ள அறிக்கையில், ஊரடங்கு உத்தரவு இன்று முதல் அமலுக்கு வருவதால் திருச்சி மத்திய பேருந்து நிலையத்திலிருந்து வெளியூர்களுக்கு செல்லும் கடைசி பேருந்துக்களின் நேரம் அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி திருச்சி மத்திய பேருந்து நிலையத்தில் இருந்து சென்னைக்கு மாலை 3 மணிக்கும், விழுப்புரம் மாலை 6 மணிக்கும், சேலத்துக்கு மாலை 5 மணிக்கும், முசிறி நாமக்கல்லுக்கு இரவு 8 மணிக்கு, கோவைக்கு மாலை 5 மணிக்கும், திருப்பூருக்கு மாலை 6 மணிக்கும்,

கரூருக்கு இரவு 7 மணிக்கும், பழனிக்கு மாலை 6 மணிக்கும், திண்டுக்கல்லுக்கு இரவு 8 மணிக்கும், மணப்பாறைக்கு இரவு 9 மணிக்கும், மதுரைக்கு இரவு 7 மணிக்கும், துவரங்குறிச்சி இரவு 8 மணிக்கும், தஞ்சாவூருக்கு இரவு 8 மணிக்கும், கும்பகோணத்துக்கு இரவு 7 மணிக்கும், வேளாங்கண்ணிக்கு மாலை 5.30 மணிக்கும், புதுக்கோட்டைக்கு இரவு 8.30 மணிக்கும், காரைக்குடிக்கு இரவு 7 மணிக்கும் கடைசிப் பேருந்து புறப்படும். அதேபோன்று சத்திரம் பேருந்து நிலையத்திலிருந்து பெரம்பலூருக்கு இரவு 8.30 மணிக்கும், அரியலூருக்கு இரவு 8 மணிக்கும், ஜெயங்கொண்டத்திற்கு இரவு 7மணிக்கும், துறையூருக்கு 8.45 மணிக்கும் கடைசி பேருந்து புறப்படும் என அவ்வறிக்கையில் தெரிவித்துள்ளார்.

Views: - 15

0

0