அடிக்கடி தண்ணீர் குடிக்க மறந்துவிடுகிறீர்களா… உங்களுக்கான ஸ்பெஷல் டிப்ஸ்!!!

Author: Hemalatha Ramkumar
7 July 2022, 1:13 pm

நீர் ஒரு முக்கிய அங்கமாகும். இது உங்கள் ஆரோக்கியம் மற்றும் மனநிலையுடன் நேரடியாக இணைக்கப்பட்டுள்ளது.
சிலருக்கு அடிக்கடி தண்ணீர் குடிக்கும் பழக்கம் இல்லை. மேலும் அது நீரிழப்பு மற்றும் சிறுநீர் பாதையில் தொற்று ஏற்படும் அபாயம் போன்ற சிக்கல்களை ஏற்படுத்தும். நீண்ட காலமாக, பருவத்தைப் பொருட்படுத்தாமல், ஒவ்வொரு நாளும் போதுமான அளவு தண்ணீர் குடிக்காமல் இருப்பது, மூட்டு மற்றும் தசை பிரச்சினைகள் உட்பட எதிர்மறையான உடல்நல தாக்கங்களுக்கு வழிவகுக்கும்.

எனவே, உங்களின் தினசரி தண்ணீர் தேவைகளைப் பூர்த்தி செய்ய உங்களைப் பயிற்றுவிப்பது முக்கியம். உங்களுக்கு மறதி ஏற்பட்டாலோ, அல்லது நீங்கள் வழக்கம் போல் தண்ணீர் குடிக்காமல் இருந்தாலோ, நிலைமையை மாற்ற சில விஷயங்களைச் செய்யத் தொடங்குங்கள்.

உடலில் உள்ள ஒவ்வொரு உயிரணுவும் சரியாக இயங்குவதற்கு நீர் தேவைப்படுகிறது. மேலும் செரிமானப் பாதை சரியாக நீரேற்றமாக இருக்கும்போது மலச்சிக்கலைத் தவிர்க்கலாம். உடலில் இருந்து நச்சுகளை அகற்றவும் தண்ணீர் உதவுகிறது, ஆரோக்கியமான சிறுநீரக செயல்பாட்டை ஊக்குவிக்கிறது. உங்கள் மூட்டுகள் மற்றும் தசைகளை உயவூட்டுகிறது, சிறந்த மற்றும் இளமையாக தோற்றமளிக்கும் தோலை ஊக்குவிக்கிறது மற்றும் உடல் வெப்பநிலையை ஒழுங்குபடுத்த உதவுகிறது.

நீங்கள் வளர வளர, உடலின் “திரவ இருப்பு சுருங்குகிறது” மற்றும் “தண்ணீரை சேமிக்கும் உங்கள் திறன் குறைகிறது”. அதனால் தாகம் உணரப்படுகிறது. நீரிழிவு மற்றும் டிமென்ஷியா போன்ற நாள்பட்ட நிலைமைகள் மற்றும் சில மருந்துகளின் பயன்பாடு ஆகியவை இந்த சிக்கல்களை மோசமாக்குகின்றன.

ஒரு வழக்கமான அடிப்படையில் தண்ணீர் குடிப்பது கடினமாக இருக்கும், குறிப்பாக ஒருவர் பிஸியாக இருந்தாலோ, அடிக்கடி குடிக்க மறந்துவிட்டாலோ அது மோசமான நிலையில் விட்டு விடும். இது போன்ற சிக்கல்களில் இருந்து உங்களை காத்துக்கொள்ள உதவும் டிப்ஸ்.

1. தினசரி இலக்கை (எவ்வளவு தண்ணீர் குடிப்பீர்கள் என) நிர்ணயித்து அதை கடைபிடிக்கவும்.
2. நீங்கள் வேலையில் பிஸியாக இருந்தால், 2-3 பாட்டில்கள் வரை நிரப்பி, உங்கள் பணி செய்யும் இடத்திற்கு அருகில் வைக்கவும்.
3. உங்களை ஹைட்ரேட் செய்ய ஒவ்வொரு ஒரு மணி நேரத்திற்கும் ஒரு ரிமைண்டரை வைக்கவும்.
4. நாள் முழுவதும் தண்ணீர் பருகுவதை நினைவில் கொள்ளுங்கள்.
5. உங்களுக்கு வெறும் நீர் பிடிக்கவில்லை என்றால், நீங்கள் வெள்ளரி, எலுமிச்சை, ஸ்ட்ராபெர்ரி போன்றவற்ற சேர்த்து பருகலாம்.
6. கூடுதலாக, வெள்ளரி மற்றும் தர்பூசணி போன்ற நீர் நிறைந்த உணவுகளை சாப்பிடுங்கள்.
7. ஒவ்வொரு உணவிற்கும் முன் ஒரு கிளாஸ் தண்ணீர் குடிக்கவும்.

  • Interim Bail For Actor Allu Arjun ரசிகர்கள் ஆனந்த கண்ணீர்… சிறைவாசத்தில் இருந்து தப்பினார் அல்லு அர்ஜூன்!
  • Views: - 1105

    0

    0