மருத்துவருக்கு கொரோனா! சேயூர் அரசு மருத்துவமனை மூடல்!!

18 August 2020, 4:09 pm
Tirupu rGospital Cosed - Updatenews360
Quick Share

திருப்பூர் : சேயூர் அரசு மருத்துவமனையில் அவிநாசி வட்டார மருத்துவ அலுவலருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதால் அரசு மருத்துவமனை மூடப்பட்டது.

அவிநாசி வட்டார மருத்துவ அலுவலர் அலுவலகம் சேயூர் அரசு மருத்துவமனையில் உள்ளது. இதில் திருப்பூரை சேர்ந்த 49 வயது ஆண் ஒருவர் (சக்திவேல்) அவிநாசி வட்டார மருத்துவராக பணியாற்றி வருகிறார். இவர திருப்பூரில் சொந்தமாக மருத்துவமனையும் நடத்தி வருகிறார்.

இந்நிலையில் இவருக்கு கடந்த மூன்று தினங்களாக தொற்று அறிகுறி தென்பட்டதை அடுத்து மேற்கொண்ட சோதனையில் கொரோனா தொற்று உறுதியானது. அவர் திருப்பூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். இதையடுத்து சேயூர் அரசு மருத்துவமனை இரண்டு தினங்களுக்கு மூடப்படுகிறது. அப்பகுதியில் கிருமிநாசினி தெளித்து தூய்மைப் பணிகள் மேற்கொள்ளப்பட்டது.

மேலும், அங்கு பணிபுரிந்த மருத்துவர்கள் உட்பட 15க்கும் மேற்பட்ட பணியாளர்களுக்கு மாதிரிகள் சேகரிக்கப்படுகிறது. அவிநாசி பகுதிகளில் கர்ப்பிணிகள் பரிசோதனை மற்றும் பிரசவத்தில் முக்கிய பங்காற்றும் சேயூர் அரசு மருத்துவமனை இரு தினங்கள் மூடப்படுவதால் அங்கு சிகிச்சை பெற்று வந்த கற்பினிகள் மற்றும் நோயாளிகள் அவதிக்கு ஆளாகியுள்ளனர்.

அவிநாசி வட்டார ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு உட்பட்ட 5 ஆரம்ப சுகாதார நிலையங்கள் மற்றும்25 துணை சுகாதார நிலையங்கள் இவரது மேற்பார்வையில் உள்ளதால் இவர் சென்றுவந்த பகுதிகள் குறித்தும் விசாரிக்கப்பட்டு வருகிறது.

Views: - 30

0

0