5 காவலர்களுக்கு கொரோனா உறுதி… திருச்சுழி காவல் நிலையம் தற்காலிகமாக மூடல்

1 August 2020, 3:45 pm
Quick Share

விருதுநகர்: திருச்சுழி காவல் நிலையத்தில் 5 காவலர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதை அடுத்து காவல் நிலையம் தற்காலிகமாக மூடப்பட்டது.

விருதுநகர் மாவட்டத்தில் தற்போது வரை கொரோனா வைரஸ் பாதித்தவர்களின் எண்ணிக்கை 7 ஆயிரத்தை கடந்துள்ளது. இதில் திருச்சுழி மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளான நரிக்குடி, வீரசோழன், கல்லூரணி ரெட்டியாபட்டி உள்ளிட்ட பகுதிகளில் நாளுக்கு நாள் கொரோனா தொற்று அதிகரித்து வருகிறது. இந்த நிலையில், திருச்சுழி காவல் நிலையத்தில் பணிபுரியும் பெண் காவலர் ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதை அடுத்து காவல் நிலையத்தில் பணிபுரியும் காவலர்களுக்கு கொரோனா தொற்று கண்டறியும் சிறப்பு மருத்துவ முகாம் கடந்த சில தினங்களுக்கு முன்பு திருச்சுழி காவல் நிலையத்தில் நடைபெற்றது.

இதில் மேலும் 4 காவலர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதையடுத்து திருச்சுழி காவல் நிலையம் தற்காலிகமாக மூடப்பட்டது. காவல் நிலையம் அரசு உதவி பெறும் பள்ளியில் செயல்பட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. மேலும், பரிசோதனை செய்த காவல்துறையினர் அனைவரும் தங்களைத் தனிமைப்படுத்திக் கொள்ளவும், முறையாக சமூக இடைவெளியை பின்பற்றவும், முகக் கவசம் அணியவும் மருத்துவர்கள் மற்றும் செவிலியர்கள் அறிவுறுத்தி உள்ளனர்.

Views: - 6

0

0