சிறுவன் கார் ஓட்டத் தெரியாமல் 11 வயது சிறுமி மீது மோதி பலி

17 August 2020, 8:46 pm
Quick Share

திருப்பத்தூர்: திருப்பத்தூர் அருகே சிறுவன் கார் ஓட்டத் தெரியாமல் 11 வயது சிறுமி மீது மோதி உயிரிழந்து குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

திருப்பத்தூர் மாவட்டம் கந்திலி அடுத்த மண்டலநாயனகுண்டா பகுதியைச் சார்ந்த பாக்கியராஜ் மகள் அனுஷ்கா (11) வீட்டில் விளையாடிக் கொண்டிருந்தார். அப்போது திரியாலம் பகுதியைச் சேர்ந்த தனபால் மகன் எழிலரசன் (18) இவர் மண்டலநாயனகுண்டா பகுதியில் உள்ள அவரது அக்கா வீட்டிற்கு வந்துள்ளார். இந்த நிலையில் அவரது வீட்டில் இருந்த குவாலிஸ் காரை எடுத்துக்கொண்டு வேகமாக வெளியே வந்துள்ளார். அப்போது அருகே அனுஷ்கா மற்றும் அவரது தாயார் அவரது வீட்டில் இருந்து வெளியே வரும்பொழுது கட்டுப்பாட்டை இழந்த வாகனம் அனுஷ்கா மீது ஏறி அருகே உள்ள சுவற்றின் மீது வேகமாக மோதி உள்ளார்.

இச்சம்பவத்தால் அனுஷ்கா சம்பவ இடத்திலேயே துடிதுடித்து பரிதாபமாக உயிரிழந்தார். இதையறிந்து சம்பவ இடத்திற்கு வந்த கந்திலி போலீசார் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக திருப்பத்தூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். காரை ஓட்ட தெரியாமல் எழிலரசன் வாகனத்தை எடுத்து வெளியே சென்று சிறுமியை விபத்துக்குள்ளாகியது. அப்பகுதி மக்களிடையே ஆழ்ந்த சோகத்தையும் பெரும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.

Views: - 29

0

0