டேங்கர் லாரி மீது கார் மோதி விபத்து: கணவன் மற்றும் மனைவி மருத்துவமனையில் அனுமதி…

10 August 2020, 8:27 pm
Quick Share

திருப்பத்தூர்: ஆம்பூர் அருகே முன்னால் சென்று கொண்டிருந்த டேங்கர் லாரி மீது கார் மோதி விபத்தில் கணவன் மற்றும மனைவி காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

கேரள மாநிலத்தை சேர்ந்த மனோ என்பவர் தனது மனைவியுடன் வேலூர் காட்பாடி பகுதியில் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெறுவதற்காக கேரளாவில் இருந்து கார் மூலமாக வேலூர் நோக்கி சென்றுகொண்டிருந்தனர். அப்போது கார் திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அடுத்த மின்னூர் அருகே பெங்களூர் சென்னை தேசிய நெடுஞ்சாலை டான்சி என்ற இடத்தில் சென்று கொண்டிருந்த போது முன்னால் சென்று கொண்டிருந்த எரிவாயு டேங்கர் லாரி மீது கார்மோதியதில் காரின் முன்பக்கம் அப்பளம் போல நொறுங்கி விபத்துக்குள்ளானது.

இதில் மனோ மற்றும் அவரது மனைவி இருவரும் படுகாயமடைந்தனர். இதையடுத்து உடனடியாக அங்கிருந்த பொதுமக்கள் அவர்களை மீட்டு சிகிச்சைக்காக ஆம்பூர் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு அங்கு முதலுதவி அளிக்கப்பட்டு பின்னர் காட்பாடி தனியார் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். காரில் பாதுகாப்பு பலூன் வசதி பொருத்தப்பட்டிருந்ததால் கணவன் மனைவி இருவரும் காயங்களுடன் உயிர் தப்பினர். இச்சம்பவம் குறித்து ஆம்பூர் கிராமிய போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Views: - 7

0

0