திருப்பூரில் பி.எஸ்.என்.எல் ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்!!

19 August 2020, 1:48 pm
Tirupur BSNL- Updatenews360
Quick Share

திருப்பூர் : திருப்பூரில் பிஎஸ்என்எல் அலுவலகம் முன்பாக அகில இந்திய BSNL ஓய்வூதியர் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

ஓய்வு பெற்ற ஊழியர்களுக்கு கடந்த இரண்டு வருடமாக மெடிக்கல் அலவன்ஸ் நிறுத்தி வைக்கப்பட்டதை கண்டித்து ஓய்வூதியர்கள் சங்கம் சார்பில் சுமார் 30க்கும் மேற்பட்டோர் இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டனர்.

பிஎஸ்என்எல் பென்ஷனர் அவர்களுக்கு மெடிக்கல் பில்களை தாமதமின்றி உடனே வழங்கிட வேண்டும் , பிஎஸ்என்எல் பென்ஷனர் களுக்கு மெடிக்கல் அலவன்ஸ்களையும் உடனே வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

கண்டன ஆர்ப்பாட்டத்தில் மத்திய அரசுக்கு எதிராக கண்டன கோஷங்கள் எழுப்பப்பட்டதுடன் , இரண்டு வருடமாக நிறுத்தி வைக்கப்பட்டிருக்கும் பிஎஸ்என்எல் ஓய்வூதியதாரர்களுக்கான மெடிக்கல் அலவன்ஸை உடனே வழங்கிட வேண்டும் என்ற கோரிக்கையும் முன்வைக்கப்பட்டது.

Views: - 25

0

0