மாநகராட்சி ஒப்பந்த பணியாளர்கள் போராட்டம்!

25 August 2020, 4:01 pm
Tirupur Protest - Updatenews360
Quick Share

திருப்பூர் : இரண்டு மாதம் ஊதியம் வழங்கப்படவில்லை என குற்றம் சாட்டி மாநகராட்சி ஒப்பந்த பணியாளர்கள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர்.

திருப்பூர் மாநகராட்சிக்குட்பட்ட நான்கு மண்டலங்களில் தூய்மை பணியில் ஒப்பந்த பணியாளர்கள் சுமார் 300க்கும் மேற்பட்டோர் பணிபுரிந்து வருகின்றனர் .

இந்நிலையில் கொரோனா ஊரடங்கு காலத்திலும் விடுமுறை இல்லாமல் பணியாற்றிவரும் அவர்களுக்கு இரண்டு மாத காலமாக ஊதியம் வழங்கப்படவில்லை என குற்றம்சாட்டி இன்று மண்டல அலுவலகம் முன்பு பணியை புறக்கணித்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.

ஏழு வருடங்களுக்கு மேலாக பணிபுரிந்து வரும் தங்களை நிரந்தர தொழிலாளர்களாக மாற்றாத சூழ்நிலையில் தற்போது சிறப்பு ஊதியம் கூட தங்களுக்கு அறிவிக்கப்படாதது ஏமாற்றம் அளிப்பதாகவும் , அதேபோல் இரண்டு மாதமாக ஊதியம் வழங்காததால் தங்கள் வாழ்வாதாரம் பாதிக்கப்படுவதுடன் தங்களுக்கு எந்த விதமான பாதுகாப்பு உபகரணங்களும் வழங்கப்படுவதில்லை என்ற குற்றச்சாட்டை முன்வைத்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.அதிகாரிகள் உரிய தீர்வு காணும் வரை தங்களது போராட்டம் தொடரும் எனவும் தெரிவித்துள்ளனர்.

Views: - 30

0

0