மதுபானக் கடையை அகற்றக்கோரி 7 இடங்களில் பொதுமக்கள் கருப்புக்கொடி ஏந்தி ஆர்ப்பாட்டம்

2 September 2020, 4:01 pm
Quick Share

திருப்பூர்: திருப்பூரில் பொதுமக்களுக்கு இடையூராக உள்ள அரசு மதுபானக் கடையை அகற்றக்கோரி 7 இடங்களில் பொதுமக்கள் கருப்புக்கொடி ஏந்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்

திருப்பூர் மாநகராட்சிக்குட்பட்ட சிங்கார வேலன் நகர் பகுதியில் அமைந்துள்ள அரசு மதுபானக் கடையை அகற்றக்கோரி பொதுமக்கள் பல மாதங்களாக போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். மாற்று இடம் பார்த்து கடையை அப்புறப்படுத்த வேண்டும் என மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டும் கடையை அப்புறப்படுத்தாதைக் கண்டித்தும் அதேபோல் ஜீவா நகர் பகுதியில் புதிதாக டாஸ்மாக் கடை அமைக்கப்பட்டதை மாற்றக் கோரியும்,

சிங்காரவேலன் நகர் ஜீவா காலனி ஆகிய பகுதிகளை சேர்ந்த பொதுமக்கள் சிங்காரவேலன் நகர் ஜீவா காலனி உள்ளிட்ட 7 இடங்களில் கருப்புக்கொடி ஏந்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்களுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்ட வட்டாட்சியர் மற்றும் டாஸ்மாக் நிர்வாகிகள் ஒரு வார காலத்தில் கடையை அப்புறப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்ததை அடுத்து பொதுமக்கள் கலைந்து சென்றனர். ஒரு வார காலத்தில் கடையை அப்புறப்படுத்தவிடில் தொடர் போராட்டங்களில் ஈடுபட போவதாகவும் பொதுமக்கள் தெரிவித்துள்ளனர்.

Views: - 0

0

0