100 கோடி தடுப்பூசிகளால் வென்ற சாதனை நாள் இன்று: தமிழிசை செளந்தரராஜன் புகழாரம்

Author: Udhayakumar Raman
21 October 2021, 3:54 pm
Quick Share

புதுச்சேரி: கொரோனா என்ற வேதனையை 100 கோடி தடுப்பூசிகளால் வென்ற சாதனை நாள் இன்று என புதுச்சேரி துணைநிலை ஆளுநர் தமிழிசை செளந்தரராஜன் தெரிவித்துள்ளார்.

புதுச்சேரி துணைநிலை ஆளுநரின் செயலகம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில்,மக்கள் தொகை அதிகம் கொண்ட நம் நாட்டில் கொரோனா தடுப்பூசி செலுத்துவது முடியுமா? என்று கேட்ட மற்ற நாடுகளுக்கு இன்று 100 கோடி தடுப்பூசி செலுத்தி, முடியும் என்று நிருபித்து சாதனை படைத்த நாடு நம் இந்தியா, இந்தியாவில் கொரோனா தடுப்பூசி செலுத்திக்கொண்டவர்களின் எண்ணிக்கை 100 கோடியை தாண்டி சாதனை படைத்துள்ளது. இந்த பெரும் சாதனையை படைக்க நம் இந்திய திருநாட்டை சிறப்பாக வழி நடத்திச் செல்லும் பாரதப்பிரதமர் நரேந்திர மோடி எனது மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக்கொள்கிறேன்.

மேலும் நம் நாட்டிலேயே கொரோனா தடுப்பூசி தயாரிக்கப்பட்டு அதை செலுத்திக்கொண்டவர்களின் எண்ணிக்கை 100 கோடியை தாண்டி மேலும், 100 நாடுகளுக்கு கொடுத்து உதவி சாதனை படைத்த நாடு நம் இந்தியா. இந்த மாபெரும் சாதனையை படைக்க கொரோனா தடுப்பூசியை கண்டுபிடித்த மருத்துவ வல்லுநர்கள், செயலாற்றிய மருத்துவர்கள், செவிலியர்கள் மற்றும் மருத்துவப்பணியாளர்கள் அனைவருக்கும் எனது பாராட்டுக்களை தெரிவித்துக்கொள்கிறேன் என தெலுங்கானா ஆளுநர் மற்றும் புதுச்சேரி துணைநிலை ஆளுநர் டாக்டர் தமிழிசை சௌந்தரராஜன் தெரிவித்துள்ளார்கள்.

Views: - 180

0

0