ஸ்பர்ஷ் தொழுநோய் விழிப்புணர்வு : அனைத்துத் துறை அலுவலர்கள் உறுதிமொழி

5 February 2021, 2:34 pm
Quick Share

காஞ்சிபுரம்: ஸ்பர்ஷ் தொழுநோய் விழிப்புணர்வு உறுதிமொழியை அனைத்துத் துறை அலுவலர்களுடன் காஞ்சிபும் மாவட்ட ஆட்சியர் மகேஸ்வரி ரவிக்குமார் ஏற்றுக்கொண்டார்.

தேசத்தந்தை மகாத்மா காந்தியடிகளின் நினைவு தினமான ஜனவரி மாதம் 30-ம் தேதி, அன்னார் தொழுநோயால் பாதிக்கப்பட்ட நபர்களுக்கு ஆற்றிய சேவையை நினைவு கூறும் வகையில், உலக தொழுநோய் ஒழிப்பு தினமாக அனுசரிக்கப்படுகிறது. காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள மக்கள் நல்லுறவு மைய கூட்டரங்கில் மாவட்ட ஆட்சியர் மகேஸ்வரி ரவிக்குமார் தலைமையில் அனைத்துத் துறை அலுவலர்களுடன் ஸ்பர்ஷ் தொழுநோய் விழிப்புணர்வு உறுதிமொழியை ஏற்றுக்கொண்டனர். இந்நிகழ்ச்சியில் மருத்துவம் (ம) ஊரக நலப்பணிகள் இணை இயக்குநர் ஜீவா, துணை இயக்குநர் மருத்துவப் பணிகள் தொழுநோய் கனிமொழி, மாவட்ட கல்வி அலுவலர் எல்லப்பன் மற்றும் அரசு அலுவலர்கள் பலர் கலந்துகொண்டனர்.

Views: - 0

0

0