ஒகேனக்கல் சுற்றுலா தளத்திற்கு அடுத்த வாரம் முதல் சுற்றுலா பயணிகள் அனுமதி: மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு…

8 September 2020, 6:32 pm
Quick Share

தருமபுரி: 6 மாதங்களுக்கு பிறகு ஒகேனக்கல் சுற்றுலா தளத்திற்கு அடுத்த வாரம் முதல் சுற்றுலா பயணிகள் அனுமதிக்கப்படுவர் என மாவட்ட ஆட்சியர் மலர்விழி தெரிவித்தார்.

தருமபுரி மாவட்டத்தில், தொடர்ந்து பெய்து வந்த மழையின் காரணமாக சீதோசன நிலை மாறி உள்ளதால், கொரோனா மற்றும் டெங்கு போன்ற வைரஸ் பரவும் என்பதால் இதனை கட்டுப்படுத்தும் வகையில், தருமபுரி மதிகோண்பாளையத்தில் காய்சல் பரிசோதனை மற்றும் தடுப்பு சிறப்பு பிரிவை மாவட்ட ஆட்சியர் மலர்விழி திறந்து வைத்தார். இனையடுத்து செய்தியாளர்களை சந்தித அவர், தருமபுரி மாவட்டத்தில் ஆயிரத்து 501 நபர்களுக்கு கொரோனாவால் பாதிக்கப்பட்டு தற்போது 297 நபர்கள் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாகவும்,

தருமபுரி மாவட்டத்தை பொறுத்தவரை கொரோனா காய்சல் அறிகுறி வெளியே தென்படுவதற்கு முன்பாகவே ஒவ்வொரு நாளும் சராசரியாக காலை மதியம் வேலைகளில் 100 முகாம்கள் நடத்துப்படுவதாகவும், இதுவரை 3 ஆயிரத்து 221 முகாம்கள் நடத்தப்பட்டுள்ளதாகவும் கூறிய அவர் 1 இலட்சத்து 64 ஆயிரத்து மேற்பட்ட நபர்கள் இந்த முகாம்கள் மூலம் பயன்பெற்றுள்ளனர். அந்த காய்சல் முகாம்களில் 110 கொரோனா நோயாளிகள் கண்டறியப்பட்டுள்ளது. நமது மாவட்டத்தை பொறுத்தவரை கிஸான் திட்டத்தில் ஒரே குடும்பத்தில்,

கணவன் மனைவி என இருவரும் விவசாயிகள் கடன் பெற்று உள்ளதாகவும் அவ்வாறு தகுதியற்ற 11 ஆயிரம் பயனாளிகள் இருக்கலாம் என ஆய்வில் தெரியவந்ததாகவும், 2 கோடியோ 25 இலட்சம் பணத்தை மீட்டுள்ளோம் எனவும் கூறிய அவர், பிற மாவட்டத்தை சேர்ந்த விவசாயிகள் தருமபுரி மாவட்டத்தில் உள்ள விவசாயிகளின் வங்கி கணக்கில் செலுத்தி முறைகேடு செய்திருப்பதாக தொடர்ந்து புகார்கள் வந்த நிலையில் அது குறித்தும் விசாரணை செய்து வருவதாகவும், மாவட்டத்தில் கிஸான் திட்டத்தில் எவ்வளவு பணம் முறைகேடுகள் நடந்துள்ளது என்று விரைவில் தெரிய வரும் என கூறினார்.

கடந்த 6 மாதங்களாக ஒகேனக்கல் சுற்றுலா தலத்தில், சுற்றுலா பயணிகளுக்கு அனுமதி மறுக்கபட்ட நிலையில், ஒகேனக்கல் சுற்றுலா தலம் எப்போது திறக்கபடும் என செய்தியாளர்கள் கேட்டதற்கு தமிழகத்தில் தற்போது பல்வேறு தளர்வுகள் படிபடியாக தளர்த்துப்பட்டு வரும் நிலையில் அடுத்த வாரம் முதல் ஒகேனக்கல்லில் தளர்வுகள் தளர்த்தபட்டு சுற்றுலா பயணிகள் அனுமதிக்கப்படுவார்கள் என மாவட்ட ஆட்சியர் தெரிவித்தார்.

Views: - 0

0

0