கர்நாடக பூங்காவில் குவிந்த சுற்றுலா பயணிகள்

31 January 2021, 1:22 pm
Quick Share

நீலகிரி: விடுமுறை நாளான இன்று உதகையில் உள்ள கர்நாடக பூங்காவில் ஏராளமான சுற்றுலா பயணிகள் குவிந்தனர்.

நீலகிரி மாவட்டத்திற்கு இங்குள்ள குளு, குளு, காலநிலையை அனுபவிக்க ஆண்டுதோறும் வெளிநாடு மற்றும் உள்நாட்டு சுற்றுலா பயணிகளும் ஏராளமானோர் வருகை புரிகின்றனர். சுற்றுலா பயணிகளை மகிழ்விக்க அனைத்து பூங்காக்களிலும் பொழுதுபோக்கு அம்சங்களும் இடம் பெற்றிருக்கும் தற்போது கொரோனா காரணமாக இங்கு வரும் சுற்றுலா பயணிகளுக்கு அனைத்து சுற்றுலா தலங்களிலும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது.

இருந்தும் சுற்றுலா பயணிகள் அதிகமானோர் குவிந்து வருகின்றனர் உதகை படகு இல்லம் அருகே உள்ள பிற மாநிலமான கர்நாடகா பூங்காவில் கோடை சீசனுக்காக சுற்றுலா பயணிகளை மகிழ்விக்கும் வகையில் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது . உதகை படகு இல்லத்தை சுற்றிப்பார்க்கும் சுற்றுலா பயணிகள் கர்நாடகாவிற்கும் படை எடுத்து வருவதால் பூங்கா களைகட்டியுள்ளது.

Views: - 1

0

0