கார் பிரியர்களால் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட, டொயோட்டா அர்பன் க்ரூஸர் எஸ்யூவி கார் கோவையில் அறிமுகம்…

Author: Poorni
6 October 2020, 2:28 pm
Quick Share

கோவை: கார் பிரியர்களால் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட, டொயோட்டா அர்பன் க்ரூஸர் எஸ்யூவி கார் கோவையில் அறிமுகம் செய்யப்பட்டது.

டொயோட்டா நிறுவனத்தின் அர்பன் க்ரூஸர் எஸ்.யூ.வி.எனும் கார் அறிமுக விழா கோவை சாய்பாபா காலனி பகுதியில் உள்ள ஆனைமலைஸ் டொயோட்டா வளாகத்தில் நடைபெற்றது.இதற்கான விழாவில் பிரபல திரைப்பட நடிகரும் இளம் தொழில் முனைவோரும் ஆன மாதம்பட்டி ரங்கராஜ் புதிய காரை அறிமுகம் செய்து வைத்தார்.

பின்னர் அவர் பேசுகையில், சிறிய வயதில் இருந்தே தமக்கு கார்கள் என்றால் மிகவும் ஆர்வம் எனவும்,தற்போது அறிமுகம் ஆகி உள்ள டொயோட்டா அர்பன் க்ரூஸர் காரில் கார் பிரியர்களுக்கான அனைத்து அம்சங்களும் நவீன வகையில் அமைக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.

தொடர்ந்து புதிய காரின் சிறப்பம்சங்கள் குறித்து ஆனைமலைஸ் டொயோட்டா வின் துணை பொது மேலாளர் ஜான் வில்லியம் பேசுகையில்,இந்த டொயோட்டா அர்பன் க்ரூஸர் மாடல்களில் புரொஜெக்டர் ஹெட்லைட்டுகள், எல்இடி பகல்நேர விளக்குகள், 7 அங்குல தொடுதிரையுடன் கூடிய இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம், க்ளைமேட் கன்ட்ரோல் ஏசி சிஸ்டம், கீ லெஸ் என்ட்ரி, புஷ் பட்டன் ஸ்டார்ட் ஆகிய வசதிகளுடன், பாதுகாப்பான பயணத்திற்கென டியூவல் ஏர்பேக்குகள், இபிடியுடன் கூடிய ஏபிஎஸ் பிரேக்கிங் சிஸ்டம், ரியர் பார்க்கிங் சென்சார்கள், ரியர் வியூ கேமரா உள்ளிட்ட பாதுகாப்பு வசதிகள் கொடுக்கப்பட்டு உள்ளதாக அவர் தெரிவித்தார். விழாவில் ஆனைமலைஸ் சிறப்பு வாடிக்கையாளர்கள் ரங்கராஜ்,ராமசாமி,மற்றும் ஷோரூம் மேலாளர்கள் குணசேகரன்,சிவராமன்,ஜவஹர் உட்பட ஷோரூம் ஊழியர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Views: - 39

0

0