விவசாய நிலத்தில் சிக்கிய டிராக்டர்: மீட்கச் சென்ற ஓட்டுநர் மீது கவிழ்ந்ததில் உயிரிழப்பு

Author: kavin kumar
2 October 2021, 5:29 pm
Quick Share

திருவள்ளூர்: திருவள்ளூர் அருகே விவசாய நிலத்தில் சிக்கிய டிராக்டரை மீட்கச் சென்ற ஓட்டுநர் டிராக்டர் தலைகீழாக கவிழ்ந்ததில் உயிரிழந்தார்.

திருவள்ளூர் மாவட்டம் திருவள்ளூர் ஒன்றியம் புன்னப்பாக்கம் ஜே ஜே நகர் பகுதியில் பிரபல ஷாலோம் திருச்சபைக்கு சொந்தமான சுமார் 10 ஏக்கர் கர்த்தரின் தோட்டம் என்ற பெயரில் பண்ணை இடம் உள்ளது. இந்த இடத்தில் கடந்த சில வருடங்களுக்கு முன்பு முதியோர் இல்லம் செயல்பட்டு வந்தது. மேலும் இந்த இடத்தில் விவசாயம் செய்து வந்துள்ளனர். மேலும் இன்று நெற்பயிர் வைப்பதற்காக நிலத்தை சேடை செய்யும் பணி பாஸ்டர் தங்கச்சனுக்கு சொந்தமான டிராக்டர் மூலம் புட்லூர் பகுதியை சேர்ந்த ஓட்டுநர் ரூபன் ஈடுபட்டுள்ளார். பின்னர் அந்த டிராக்டர் சேடையில் சிக்கிக் கொண்டுள்ளது அதனால் புன்னப்பாக்கம் வழக்கறிஞர் புஷ்பராஜ் டிராக்டர் உதவியைக் கொண்டு சிக்கியவர்களை மீட்கும் பணிக்காக ஓட்டுநராக ஒதிக்காடு ஊராட்சி எம்ஜிஆர் நகரைச் சார்ந்த முனுசாமி என்பவர் மகன் ஜெகதீஷ் வந்துள்ளார்.

இதனையடுத்து தான் கொண்டுவந்த டிராக்டரை வெளியில் நிறுத்தி விட்டு சேற்றில் சிக்கிக் கொண்ட ஜாக்சன் ஏரி சேற்றில் இருந்து மீட்கும் பணியில் ஈடுபட்டுள்ளார். அப்போது எதிர்பாராதவிதமாக டாக்டர் தலைகீழாக கவிழ்ந்தது, இதில் சிக்கிக்கொண்ட ஓட்டுனர் ஜெகதீஷ் பலத்த காயமடைந்தார். இதனையடுத்து அருகில் இருந்தவர்கள் அக்கம்பக்கத்தினர் சுமார் அரை மணி நேரத்திற்கு பின்பு ஜெகதீசை மீட்டு திருவள்ளூர் அரசு தலைமை மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். பின்னர் அங்கு ஜெகதீசை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக தெரிவித்ததை அடுத்து உடல் பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டது. உயிரிழந்த ஜெகதீஷ்க்கு செம்பருத்தி என்ற மனைவியும் மூன்றாவது படிக்கும் விக்னேஷ் மற்றும் ஒன்றாவது படிக்கும் விஷ்ணு என்ற இரு ஆண் குழந்தைகளும் உள்ளது குறிப்பிடத்தக்கது.

Views: - 139

0

0