ஏற்றுமதியாளர்களுக்கான வர்த்தக கருத்தரங்கம் மற்றும் கண்காட்சி….

Author: Udhayakumar Raman
25 September 2021, 3:53 pm
Quick Share

அரியலூர்: அரியலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஏற்றுமதியாளர்களுக்கான வர்த்தக கருத்தரங்கம் மற்றும் கண்காட்சி நடைபெற்றது.

அரியலூர் மாவட்ட தொழில் வணிகதுறையின் சார்பில் ஏற்றுமதியாளர்களுக்கான வர்த்தக கருத்தரங்கம் மற்றும் கண்காட்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று நடைப்பெற்றது. இதில் மாவட்ட ஆட்சியர் ரமணசரஸ்வதி கலந்து கொண்டு அரியலூர் மாவட்டத்தில் உற்பத்தி செய்யபட்டு வரும் மதிப்புகூட்டபட்ட உணவு பொருட்கள் மற்றும் காலணிகள், பர்னிச்சர்கள் உள்ளிடவற்றின் கண்காட்சியினை பார்வையிட்டார்.

பின்னர் தொழில் தொடங்குவதற்கான வழிமுறைகள் குறித்தும், ஏற்றுமதி மற்றும் இறக்குமதி செய்வது குறித்தும் நடைப்பெற்ற ஆலோசனை கூட்டத்தில் கலந்து கொண்டார். பின்னர் படித்த இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பை உருவாக்கும் திட்டத்தின் கீழ் 2 நபர்களுக்கு தலா 5 லட்சம் வீதம் 10 லட்சத்திற்கான காசோலைகளை மாவட்ட ஆட்சியர் வழங்கினார். இதில் அரசுதுறை அதிகாரிகள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

Views: - 106

0

0