பொதுத்துறை நிறுவனங்களை தனியாரிடம் ஒப்படைப்பதை கண்டித்து தொழிற்சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்

Author: Udhayakumar Raman
8 September 2021, 3:56 pm
Quick Share

திருச்சி: திருச்சியில் மத்திய அரசு பொதுத்துறை நிறுவனங்களை தனியாரிடம் ஒப்படைக்கும் அறிவிப்பை கண்டித்து எஸ்.ஆர்.எம்.யூ தொழிற்சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட்டனர்.

மத்ததிய அரசு ரயில்வே உள்ளிட்ட பொதுத்துறை நிறுவனங்களை ஒவ்வொன்றாக தனியாரிடம் ஒப்படைத்து வருகிறது. இந்நிலையில் தற்போது மேலும் 6 லட்சம் கோடிக்கு பொதுத்துறை நிறுவனங்களை தனியாரிடம் ஒப்படைக்கப்படும் என அறிவித்துள்ளது. அதில் ரூ.1,52,496 கோடி மதிப்பிற்கு ரயில் நிலையங்கள், ரயில்வே குடியிருப்புகள், ரயில் வழித்தடங்கள் உள்ளிட்டவற்றை குறிப்பாக தென்னக ரயில்வேயின் 400 ரயில் நிலையங்கள், 265 குட்ஷெட், ஊட்டி மலை ரயில் உட்பட 4 மலை ரயில்கள், 1400 கி.மீ நீளமுள்ள மின்சார தடங்களுடன் கூடிய வழிதடங்கள் போன்றவற்றையும் இரயில் நிலையங்களை 50 ஆண்டு முதல் 99 ஆண்டு குத்தகைக்கும்,

இரயில் போக்குவரத்தை 35 ஆண்டு குத்தகைக்கும் தனியாருக்கு தாரை வார்க்க மத்திய அரசு முடிவெடுத்துள்ளது. மத்திய அரசின் அந்த முடிவை கண்டித்தும் முடிவை உடனடியாக கைவிட வலியுறுத்தியும் எஸ்.ஆர்.எம்.யூ ரயில்வே தொழிற்சங்கத்தினர் திருச்சி பொன்மலை ரயில்வே பணிமனை முன்பு துணைப்பொதுச்செயலாளர் வீரசேகரன் தலைமையில் நூறுக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு ஒன்றிய அரசை கண்டித்து முழக்கங்களை எழுப்பினர். ஒன்றிய அரசு தனியார்மய கொள்கையை கைவிடவில்லையென்றால் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபடுவோம் என எச்சரித்தனர்.

Views: - 127

0

0