பாரம்பரிய உணவு திருவிழா கண்காட்சி தொடக்கம்

30 September 2020, 6:52 pm
Quick Share

பெரம்பலூர்: ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்டத்தின் சார்பில் பாரம்பரிய உணவு திருவிழா கண்காட்சி பெரம்பலூரில் நடைபெற்றது.

ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்டத்தின் சார்பில் பாரம்பரிய உணவு திருவிழா கண்காட்சி பெரம்பலூர் புதிய பேருந்து நிலையத்தில் நடைபெற்றது மாவட்ட வருவாய் அலுவலர் ராஜேந்திரன் கண்காட்சி ரிப்பன் வெட்டியும், குத்துவிளக்கேற்றி துவக்கி வைத்தார். இதில் பாரம்பரிய சிறுதானிய உணவுகளான கம்பு, கேழ்வரகு, திணை சாமை உள்ளிட்ட ஊட்டச்சத்து உள்ள உணவு பொருட்கள் மற்றும் கீரை வகைகள் அவற்றில் உள்ள சத்துக்கள் பற்றி குறிப்பிடப்பட்டு பொதுமக்கள் பார்வைக்கு வைக்கப்பட்டிருந்தன.

இதனை மாவட்ட வருவாய் அலுவலர் ராஜேந்திரன் மற்றும் நகராட்சி ஆணையர் குமரிமன்னன் வட்டாட்சியர் பாரதி வளவன் உள்ளிட்ட அரசுத் துறை அலுவலர்கள் பார்வையிட்டு ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சித் திட்டத்தின் கீழ் கர்ப்பிணிப் பெண்கள் மற்றும் குழந்தை பெற்ற தாய்மார்களுக்கு ஊட்டச்சத்து உணவு பொருட்கள், மரக்கன்றுகள் இலவசமாக வழங்கப்பட்டன. மேலும் கலந்து கொண்ட அனைவருக்கும் முருங்கை சூப், திணை பாயாசம், உளுந்தங்கஞ்சி உள்ளிட்ட ஊட்டச்சத்து பானங்கள் வழங்கப்பட்டன. இந்நிகழ்ச்சியில் சமூக நலத்துறை அலுவலர்கள், ஊட்டச்சத்து துறை அலுவலர்கள் பணியாளர்கள் மற்றும் பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.