மின்சாரம் தாக்கி விவசாயி பரிதாபமாக உயிரிழந்த சோகம்

20 July 2021, 4:58 pm
Quick Share

திருவள்ளூர்: திருவள்ளூர் அருகே இருசக்கர வாகனத்தில் சென்ற விவசாயி மின்கம்பி அறுந்து விழுந்து கிடந்ததில் சிக்கி மின்சாரம் தாக்கி பரிதாபமாக உயிரிழந்த சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

திருவள்ளூர் மாவட்டம் தாமரைபாக்கம் அருகே உள்ள கொமக்கம்பேடு கிராமத்தை சேர்ந்த விவசாயி ராமலிங்கம் என்பவர் தனது சைக்கிளில் வயல்வெளி வழியாக சென்றபோது விவசாய நிலத்தில் அறுந்து கிடந்த மின் கம்பியில் மின்சாரம் தாக்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். தகவலறிந்து வந்த வெங்கல் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு உடலை மீட்டு திருவள்ளூர் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். விவசாயின் உறவினர்கள் மற்றும் குடும்பத்தினர் அலட்சியமாக செயல்பட்ட மின்வாரிய அலுவலகத்தினரை கண்டித்து திருநின்றவூர் தாமரைபாக்கம் சாலையில் மறியலில் ஈடுபட்டனர். பொதுமக்களிடம் சமரசம் மேற்கொண்டது தொடர்ந்து அவர்கள் மறியலை கைவிட்டு கலைந்து சென்றனர். மின்சாரம் தாக்கி விவசாயி உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

Views: - 39

0

0