ரயில் மோதி கூலித் தொழிலாளி உயிரிழப்பு…

3 August 2020, 11:05 pm
Quick Share

வேலூர்: குடியாத்தத்தில் இருசக்கர வாகனத்தில் ரயில்வே தண்டவாளத்தை கடக்க முயன்ற போது ரயில்மோதி கூலித்தொழிலாளி உயிரிழந்தார்.

வேலூர்மாவட்டம், குடியாத்தம் அடுத்த கிராமத்தை சேர்ந்தவர் கூலித்தொழிலாளி ரஞ்சன் (26)இவருக்கு திருமணமாகி இரண்டு ஆண்டுகளாகிறது. இந்த நிலையில் இன்று வீட்டிலிருந்து ரஞ்சன் தனது இருசக்கர வாகனத்தில் பெட்ரோல் வாங்குவதற்காக சென்றுள்ளார். அப்போது குடியாத்தம் ரயில் நிலையம் அருகேயுள்ள ரயில்வே தண்டவாளத்தை இருசக்கரவாகனத்தில் கடந்துள்ளார்.

அப்போது சென்னையிலிருந்து – ஜோலார்பேட்டை நோக்கி சென்ற கூட்ஸ் ரயில் ரஞ்சன் மீது மோதியதில் அவர் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி பலியானார்.இதுகுறித்து ஜோலார்பேட்டை ரயில்வே போலீசார் வழக்குபதிவு செய்து இறந்த ரஞ்சனின் உடலை பிரேதபரிசோதனைக்காக வேலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். பொதுமக்கள் யாரும் இது போன்று ரயில் தண்டவாளங்களை கடக்க வேண்டாமெனவும், ரயில்வே போலீசார் அப்பகுதியில் உள்ள சுமார் நூற்றுக்கும் மேற்பட்ட பொது பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர்.

Views: - 7

0

0