ரயிலில் வந்த பார்சல்; தப்பி ஓடிய கடத்தல் கும்பல்! கேட்பாரற்று கிடந்த 18 கிலோ கஞ்சா பறிமுதல்

Author: kavin kumar
20 August 2021, 2:29 pm
Quick Share

வேலூர்: காட்பாடி அருகே ஓடும் ரயிலில் கேட்பாரற்று கிடந்த 18 கிலோ கஞ்சாவை தனிப்படை போலீசார் பறிமுதல் செய்தனர்.

வேலூர் மாவட்டம் காட்பாடி இரயில் நிலையத்தில் விசாகப்பட்டினத்தில் இருந்து கேரள மாநிலம் கொல்லம் வரை செல்லும் பயணிகள் ரயிலில் இன்று காலை பயணிகள் உடமைகள் தொடர்ந்து திருடு போவதின் காரணமாக ரகசிய கண்காணிப்பில் ஈடுபட்ட தனிப்படையினர் சோதனையின் போது பயணிகள் பயன்படுத்தும் கழிவறை அருகே கேட்பாரற்று கிடந்த இரண்டு பைகளில் 13 பொட்டலங்களில் அடைத்து வைக்கப்பட்டிருந்த 18 கிலோ கடத்தல் கஞ்சா கைப்பற்றினர். கைப்பற்றிய 18 கிலோ கஞ்சாவை காட்பாடி ரயில்வே போலீசாரிடம் தனிப்படை போலீசார் ஒப்படைத்தனர். காட்பாடி ரயில் நிலையத்தில் தொடர்ந்து கஞ்சா பறிமுதல் செய்யப்படுவது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Views: - 631

0

0