வாக்குச்சாவடி மையங்களில் பணியாற்றும் ஆசிரியர்களுக்கு பயிற்சி : ஆட்சியர் நேரில் ஆய்வு

Author: kavin kumar
10 February 2022, 5:40 pm
Quick Share

கள்ளக்குறிச்சி : திருக்கோவிலூரில் உள்ள வாக்குச்சாவடி மையங்களில் பணியாற்றும் ஆசிரியர்களுக்கு நடைபெற்று வரும் பயிற்சி கூட்டத்தை மாவட்ட ஆட்சியர் பி.என் ஶ்ரீதர் நேரில் ஆய்வு செய்தார்.

தமிழகம் முழுவதும் உள்ள மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சிகளுக்கு வரும் 19ஆம் தேதி ஒரே கட்டமாக நகர்புற உள்ளாட்சி தேர்தல் நடைபெற உள்ளது. இந்நிலையில், கள்ளக்குறிச்சி மாவட்டம் திருக்கோவிலூர் நகராட்சிக்கு உட்பட்ட 27 வார்டுகளுக்கு 35 வாக்குச்சாவடி மையங்களில் தேர்தல் நடைபெற உள்ளது.

இதனையொட்டி, இன்று திருக்கோவிலூர் கபிலர் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி வளாகத்தில் வாக்குச்சாவடி மையங்களில் பணியாற்ற உள்ள ஆசிரியர்களுக்கு பயிற்சி கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தினை மாவட்ட ஆட்சியர் பி.என் ஶ்ரீதர் நேரில் ஆய்வு செய்தார். இந்த ஆய்வின் போது வருவாய்துறை மற்றும் நகராட்சி அலுவலர்கள் உடனிருந்தனர்.

Views: - 279

0

0