ஆயுதப் படை போலீசாருக்கு கல்லணை கால்வாயில் மீட்பு பணி குறித்த பயிற்சி

By: Udayaraman
8 October 2020, 8:53 pm
Quick Share

தஞ்சை: வடகிழக்கு பருவமழை தொடங்க உள்ள நிலையில் ஆயுதப் படை போலீசாருக்கு கல்லணை கால்வாயில் மீட்பு பணி ஒத்திகை நடைபெற்றது.

வடகிழக்கு பருவமழை இன்னும் சில வாரங்களில் தொடங்க உள்ளது. இதையொட்டி மழை காலத்தில் ஆறு, குளம், வெள்ளத்தில் யாராவது சிக்கினால் அவர்களை பத்திரமாக மீட்பது எப்படி என்பது குறித்து தஞ்சை வண்ணாரப்பேட்டை கல்லணை கால்வாயில் மீட்பு பணி ஒத்திகை நடைபெற்றது. இதற்காக சென்னையில் இருந்து 5 பேர் கொண்ட பேரிடர் மேலாண்மை குழு போலீசார் தஞ்சை ஆயுதப்படை போலீசார் 60 பேருக்கு பேரிடர் மீட்பு செயல்முறை விளக்கம் அளித்தனர்.

நிகழ்ச்சிக்கு ஆயுதப்படை துணை போலீஸ் சூப்பிரண்டு சம்பத்பாலன், இன்ஸ்பெக்டர் தவச்செல்வன், உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். இதில் கல்லணை கால்வாயில் தத்தளிப்பவர்களை கயிறு, டியூப் மற்றும் லைப் ஜாக்கெட் மூலம் எவ்வாறு மீட்பது அடித்து செல்வர்களை மோட்டார் படகில் விரைந்து சென்று காப்பது எப்படி என்பது உள்ளிட்ட பல்வேறு மீட்பு செயல்முறை விளக்கத்தை ஆயுதப்படை போலீசாருக்கு அந்த குழுவினர் விளக்கமாக செய்து காண்பித்தனர். மேலும் பல்வேறு மீட்பு பணிகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.

Views: - 41

0

0