இலவசமாக வீடு கட்டிதரகோரி ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்ட திருநங்கைகள்

2 November 2020, 5:59 pm
Quick Share

வேலூர்: திருநங்கைகளுக்கு அரசு இலவசமாக வீடு கட்டிதரகோரி திருநங்கைகள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுப்பட்டனர்.

வேலூர் மாவட்டம்,வேலூர் சத்துவாச்சாரியில் உள்ள மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை இன்று திருநங்கைகள் 60-க்கும் மேற்பட்டோர் முற்றுகையிட்டு தங்கள் வாழ்க்கை மேம்படுத்திடவும் தங்களுக்கு அரசின் சார்பில் இலவசமாக வீடு கட்டிதர கோரிக்கை விடுத்து ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு கோஷங்களை எழுப்பி போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. பின்னர் காவல்துறையினர் அவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி உயரதிகாரிகளுக்கு மனு அளிக்குமாறும் போராட்டத்தை கைவிடுமாறு அறிவுறுத்தியதை அடுத்து அவர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.

Views: - 23

0

0