அனைவரும் தடுப்பூசி செலுத்திக் கொள்ள திருநங்கைகள் கோரிக்கை

3 July 2021, 1:58 pm
Quick Share

திருச்சி: பொதுமக்கள் அனைவரும் தடுப்பூசியை செலுத்திக் கொள்ள வேண்டும் என திருநங்கைகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

தமிழகத்தில் கொரானோ பாதிப்பை கட்டுப்படுத்தும் வகையில் தமிழ்நாடு அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாக நோயை கட்டுப்படுத்தும் வகையில் தமிழகஅரசு தடுப்பூசி செலுத்தும் பணிகளை முழுவீச்சில் மேற்கொண்டு வருகிறது. முதலில் களப்பணியாளர்கள் அதனை தொடர்ந்து 18 வயது முதல் 44 வயது உடையவர்களுக்கும் அதனையடுத்து அனைத்து வயதினருக்கும் தடுப்பூசி செலுத்தும் பணி மேற்கொள்ளப்பட்டது. இந்நிலையில் இன்று திருநங்கைகளுக்கான சிறப்பு முகாம் நடைபெறும் என திருச்சி மாவட்ட ஆட்சியர் சிவராசு தெரிவித்திருந்தார். அதன்படி இன்று காலை திருச்சி ஜமால் முஹம்மது கல்லூரியில் இதற்கான தடுப்பூசி போடும் பணி மாவட்ட சமூக நல அலுவலர் தமுமீன்நிஷா தலைமையில் நடைபெற்றது.

மாவட்ட சுகாதாரத்துறை இணை இயக்குனர் ராம்கணேஷ் தடுப்பூசி போடும் பணிகளை ஆய்வு மேற்கொண்டார். திருச்சி மாவட்டத்தில் சுமார் 273 திருநங்கைகள் உள்ளனர். திருநங்கைகள்
மற்றும் பொதுமக்கள் அனைவருக்கும் தடுப்பூசி போடும் பணி முழுவீச்சில் செயல்படும் என சுகாதார துறை இணை இயக்குனர் ராம் கணேஷ் தெரிவித்தார். இன்று இந்த முகாமில் பொதுமக்களுக்கு கோவிசீல்டு தடுப்பூசி செலுத்தப்பட்டது. இதுபோல திருச்சி காந்தி மார்க்கெட் வியாபாரிகளுக்கும், சையத் முத்துர்சா பள்ளியிலும், நகைகடை வியாபாரிகளுக்கு பிஷப் ஹீபர் மேல்நிலைப் பள்ளிகளிலும் தடுப்பூசியை செலுத்தும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. திருச்சி மாவட்டத்தில் 32முகாம்களில் கோவிசீல்டு தடுப்பூசி அனைத்து பொதுமக்களுக்கும் செலுத்தப்பட்டு வருகிறது.

Views: - 61

0

0