அரசு சாலை போக்குவரத்து கழக ஊழியர்கள் கண்டன ஆர்ப்பாட்டம்

5 November 2020, 4:08 pm
Quick Share

புதுச்சேரி: நிலுவையில் உள்ள 6 மாத ஊதியத்தை வழங்கக்கோரி புதுச்சேரி அரசு சாலை போக்குவரத்து கழக ஊழியர்கள் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

புதுச்சேரி அரசு சாலை போக்குவரத்து கழகத்தில் 800க்கும் மேற்பட்ட ஓட்டுனர்கள் மற்றும் நடத்துனர்கள் பணிபுரிந்து வருகின்றனர். இதனிடையே கடந்த 6 மாத காலமாக ஊழியர்களுக்கு ஊதியம் வழங்கப்படவில்லை. இந்நிலையில் நிலுவையில் உள்ள ஊதியம் மற்றும் தீபாவளி போனஸ் தொகையை உடனடியாக வழங்கக்கோரி தொழிற்சங்கங்களின் கூட்டு நடவடிக்கை குழு சார்பில் இன்று கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.


அரசு சாலை போக்குவரத்து கழக அலுவலகம் முன்பு நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்டத்தில் 50க்கும் மேற்பட்ட ஊழியர்கள் கலந்துகொண்டு கோரிக்கைகளை நிறைவேற்றக்கோரி அரசுக்கு எதிராக கண்டன முழக்கங்களை எழுப்பினர். மேலும் கோரிக்கைகள் நிறைவேற்றப்படவில்லை என்றால் போராட்டம் தொடரும் எனவும் ஊழியர்கள் தெரிவித்தனர்.

Views: - 17

0

0