அரசு மருத்துவமனையில் 25 ஆண்டுகளுக்கு பிறகு எலும்பு முறிவுக்கு சிகிச்சை…! விபத்தில் கை முறிந்த நபருக்கு பிளேட் வைத்து அறுவை சிகிச்சை செய்து குணப்படுத்திய மருத்துவர்கள்…!!

Author: Udhayakumar Raman
21 September 2021, 11:51 pm
Quick Share

தாராபுரம் அரசு மருத்துவமனைக்கு மூலனூர் குண்டடம் தாராபுரம் உள்ளிட்ட ஒன்றிய பகுதிகளில் இருந்து நாள்தோறும் 500க்கும் மேற்பட்ட நோயாளிகள் சிகிச்சை பெற்று செல்கின்றனர். மேலும் 200க்கும் மேற்பட்ட உள்நோயாளிகளாக சிகிச்சை பெற்று வருகின்றனர்.தாராபுரம் பகுதியில் தேசிய நெடுஞ்சாலைகள் மற்றும் மாவட்ட நெடுஞ்சாலைகள் உள்ளது இப்பகுதியில் அடிக்கடி விபத்தில் சிக்கியவர்களுக்கு அவர்களுக்கு சிகிச்சை அளிக்க அரசு மருத்துவமனையை நாடி வந்தனர். இந்த நிலையில் எலும்பு முறிவு பிரிவு தாராபுரம் அரசு மருத்துவமனையில் இல்லாததால் திருப்பூர் ஈரோடு கோவை கரூர் உள்ளிட்ட பிற மாவட்டங்களுக்குச் சென்று எலும்பு முறிவு மருத்துவ சிகிச்சை பெற்று வந்தனர்.

இதனால் தனியார் மருத்துவ மனையினர் மற்றும் ஆம்புலன்ஸ் ஓட்டுநர்கள் கொள்ளை லாபம் அடைந்து வந்த நிலையில், இதற்காக தாராபுரம் அரசு மருத்துவமனையில் எலும்பு மருத்துவ மற்றும் மருத்துவர்கள் நியமிக்கப்பட வேண்டும் என கடந்த 25 ஆண்டு காலமாக பொதுமக்கள் கோரிக்கை வைத்திருந்தனர். அதன்பேரில் கடந்த சட்டமன்ற தேர்தலின் போது திமுக சார்பில் போட்டியிட்ட கயல்விழி செல்வராஜ் அதிமுக கூட்டணியில் போட்டியிட்ட எல்‌.முருகன் ஆகியோர் தங்களது தேர்தல் அறிக்கையில் அரசு மருத்துவமனைக்கு எலும்பு முறிவு மருத்துவர்கள் நியமிக்கப்படுவார்கள் என வாக்குறுதி அளித்திருந்தனர். இந்த நிலையில் கடந்த சட்டமன்ற தேர்தலில் போட்டியிட்டு குறைந்த வாக்கு வித்தியாசத்தில் எல். முருகன் தோல்வி அடைந்ததை தொடர்ந்து பாஜகவை எதிர்த்து போட்டியிட்ட திமுக வேட்பாளர் கயல்விழி செல்வராஜ் குறைந்த வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.

அவர் தேர்தல் வாக்குறுதியில் கூறியவாறு தாராபுரம் அரசு மருத்துவமனைக்கு 25 ஆண்டுகளுக்கு பிறகு தாராபுரம் அரசு மருத்துவமனையில் எலும்பு முறிவு பிளேட் வைத்து அறுவை சிகிச்சையை மேற்கொண்டனர். தாராபுரம் அரசு மருத்துவமனையில் நீண்டகாலமாக எலும்பு முறிவு மருத்துவர் இல்லாமல் இருந்து வந்தது. இந்நிலையில் முதல்வர் மு.க. ஸ்டாலின் பரிந்துரையின் கீழ் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் மேற்கொண்ட துரித நடவடிக்கை காரணமாகவும், தாராபுரம் சட்டமன்ற உறுப்பினர் ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர் கயல்விழி செல்வராஜ் முயற்சியினாலும் எலும்பு முறிவு மருத்துவர் நவின் நியமிக்கப்பட்டார். இந்நிலையில் கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்பு மூலனூர் ஒன்றியம் நத்தம்பாளையம் ஊராட்சியை சேர்ந்த திருமூர்த்தி என்பவருக்கு சாலை விபத்தில் கையில் இடது எலும்பு முறிவு ஏற்பட்டது.

அவர் தாராபுரம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார் அவருக்கு அறுவை சிகிச்சை செய்து பிளேட் வைத்து ஆபரேஷன் செய்து குணம் அடைந்துள்ளார். அவரை இன்று ஆதி திராவிடர் நலத்துறை அமைச்சர் நேரில் சென்று நலம் விசாரித்தார் அப்போது அரசு மருத்துவமனை தலைமை மருத்துவர் சிவபாலன் எலும்பு முறிவு மருத்துவர் நவன் தாராபுரம் திமுக நகரச் செயலாளர் தனசேகர் ஒன்றிய செயலாளர் எஸ்.வி.செந்தில்குமார் ராஜேந்திரன் மாரிமுத்து ஆகியோர் உடன் இருந்தனர். தாராபுரம் அரசு மருத்துவமனையில் முதல் எலும்பு முறிவு நோயாளியை குணப்படுத்திய மருத்துவர்களுக்கு பொதுமக்கள் மற்றும் நோயாளிகள் நன்றியையும் வாழ்த்துக்களையும் தெரிவித்துள்ளனர்.மேலும் தணியாக எலும்பு அறுவை சிகிச்சையை அளிக்க எலும்பு முறிவு தனி பிரிவு செயல்படுத்த வேண்டும் என்பது பொதுமக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.

Views: - 511

0

0