புதுச்சேரி: புதுச்சேரியில் காயமடைந்த மயிலை போலீசார் மீட்டு வனத்துறையினரிடம் ஒப்படைத்தனர்
புதுச்சேரி பிள்ளையார்குப்பம் பகுதியை சேர்ந்தவர் சித்ரா இவர் இன்று காலை அதே பகுதியில் நடைபயிற்சி மேற்கொண்டிருந்தார். ஒரு காலி மனை அருகே சென்ற போது ஒரு அழு குரல் கேட்டதை அடுத்து அங்கு சென்று பார்த்த போது ஒரு மயில் அடிப்பட்டு கிடந்ததை கண்ட அவர், உடனடியாக இது குறித்து கிரும்மாபாக்கம் காவல் நிலையத்திற்கு அளித்த தகவலின் பேரில், அங்கு வந்த போலீசார் வனத்துறையினரை அழைத்து கால் மற்றும் இரக்கையில் காயங்கள் உடன் இருந்த மயிலை மீட்டு முதல் உதவி சிகிச்சை அளித்தனர்.
தொடர்ந்து விசாரணை மேற்கொண்டதில், அடிப்பட்டு கிடந்தது 4 வயது மதிக்கதக்க பெண் மயில் என்றும், அருகே உள்ள வனப்பகுதியில் இருந்து வெளியே வந்த போது தெரு நாய்கள் மயிலின் கால்கள் மற்றும் இரக்கைகளை கடித்து உள்ளது தெரியவந்தது. இதனை அடுத்து மீட்கப்பட்ட மயிலை வனத்துறையினர் சிகிச்சைகாக வனத்துறை அலுவலகத்திற்கு எடுத்து சென்றனர்.
0
0