நிவர் புயலால் வேரோடு விழுந்த மரங்கள்: விரைந்து செயல்பட்டு வரும் தீயணைப்பு துறை

25 November 2020, 8:24 pm
Quick Share

செங்கல்பட்டு: மதுராந்தகம் அருகே நிவர் புயலால்,10க்கும் மேற்பட்ட மரங்கள் வேரோடு விழுந்தன. தீயணைப்பு துறையினர் விரைந்து செயல்பட்டு விழுந்த மரங்களை அப்புறப்படுத்தி வருகின்றனர்

வங்கக் கடலில் ஏற்பட்ட தாழ்வு அழுத்தம் காரணமாக புயல் மற்றும் அடைமழை ஏற்பட்டு புதுச்சேரியை சுற்றி 180 கிலோ மீட்டர் தொலைவில் நகந்து கொண்டுள்ளது. விடாமல் பெய்கின்ற அடைமழைனாலும் 50 / 60 கிலோ மீட்டர் வேகத்தில் காற்று வீசுவதாலும் மதுராந்தகம் சுற்றியுள்ள பல இடங்களில் மரங்கள் வேரோடு சாய்ந்தன. கிளைகள் உடைந்து கீழே விழுந்தது. செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் உத்திரமேரூர் செல்லும் சாலையில் நெல்வாய் கூட்ரோடு பகுதியில் சுமார் 40 வருடங்கள் பழமையான மழை மரம் எனப்படும் மரம் வேரோடு சாய்ந்தது.

தகவல் கேள்விப்பட்டு விரைந்து வந்த காவல்துறையினர் மற்றும் தீயணைப்பு துறையினர் உடனடியாக ரம்பம் வைத்து வெட்டி மரங்களையும் கிளைகளையும் அப்புற படுத்தினர். இதனால் சுமார் 20 நிமிடங்கள் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. இதேபோல் படாளம் கருங்குழி சாலவாக்கம் போன்ற பகுதிகளிலும் முறிந்து விழுந்த மரங்களை பொதுப்பணித் துறையிடம் தீயணைப்பு துறையினரும் உடனடியாக அப்புறப்படுத்தினர்.

Views: - 0

0

0