காடுவெட்டி தியாகராஜனை கண்டித்து அதிமுகவினர் கண்டன போராட்டம்

23 November 2020, 1:35 pm
Quick Share

திருச்சி: திருச்சியில் பெண்களை இழிவாக பேசிவரும், திமுக வடக்கு மாவட்ட செயலாளர் காடுவெட்டி தியாகராஜனை கண்டித்து அதிமுகவினர் கண்டன போராட்டத்தில் ஈடுப்பட்டனர்.

திமுக வடக்கு மாவட்ட செயலாளர் காடுவெட்டி தியாகராஜன், பெண்களைக் குறித்து இழிவாக பேசிய ஆடியோ வெளியாகி, அவர் மீது ஆறு பிரிவின்கீழ் வழக்கு பதிந்துள்ள நிலையில், மீண்டும் வன்னியர் சமுதாயத்தைச் சேர்ந்த பெண் ஒருவரை இழிவாக பேசும் ஆடியோ வெளியாகி திருச்சியில் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. முசிறி, துறையூர், மண்ணச்சநல்லூர் ஆகிய தொகுதிகளை உள்ளடக்கிய, திருச்சி வடக்கு மாவட்ட திமுக செயலாளர் பொறுப்பில் நியமிக்கப்பட்டவர் தான் காடுவெட்டி தியாகராஜன்.

இந்த நிலையில் அதிமுக திருச்சி வடக்கு மாவட்ட செயலாளர் பரஞ்ஜோதி, தெற்கு மாவட்ட செயலாளர் குமார் உள்ளிட்டோர் கடந்த இரண்டு தினங்களாக திமுகவின் வடக்கு மாவட்ட செயலாளர் காடுவெட்டி தியாகராஜனை கண்டித்து கண்டன போராட்டங்கள் நடத்தினர். அதன் தொடர்ச்சியாக தற்போது திருச்சி அதிமுக மாநகர் மாவட்ட கழகம் சார்பில், மாநகர் மாவட்ட கழக செயலாளரும், தமிழக சுற்றுலா துறை அமைச்சருமான வெல்லமண்டி நடராஜன் ஏற்பாட்டில், மாவட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டுள்ள கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

திருச்சி சத்திரம் பேருந்து நிலையம் அருகே உள்ள அண்ணா சிலை முன்பு நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஆயிரத்துக்கு மேற்பட்ட அதிமுகவினர் கலந்துகொண்டு திமுகவிற்கு எதிராகவும், திமுக மாவட்ட செயலாளர் காடுவெட்டி தியாகராஜனை கண்டித்தும் கண்டன கோஷங்களை எழுப்பினார்கள்.

Views: - 0

0

0