பி.எஸ்.என்.எல் ஊழியர்கள் போராட்டம்!!

25 August 2020, 2:42 pm
Trichy BSNL - Updatenews360
Quick Share

திருச்சி : 11மாத சம்பள நிலுவை தொகையை வழங்க வலியுறுத்தி பிஎஸ்என்எல் ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

பிஎஸ்என்எல் ஊழியர்கள் சங்கம் மற்றும் தமிழ்நாடு தொலைதொடர்பு ஒப்பந்த தொழிலாளர்கள் சங்கத்தின் சார்பில் 11மாத சம்பள நிலுவை தொகை வழங்க வலியுறுத்தி திருச்சி பி.எஸ்.என்.எல் தலைமை அலுவலகம் முன்பு 20க்கு மேற்ப்பட்ட ஒப்பந்த தொழிலாளர்கள் தொடர் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுப்பட்டுள்ளனர்.

ஆர்ப்பாட்டத்தில் சம்பள நிலுவைத் தொகையை உடனடியாக வழங்கிட வேண்டும், ஒப்பந்த தொழிலாளர்களை பணி நீக்கம் செய்யக்கூடாது, ஈபிஎப், இஎஸ்ஐ மற்றும் சம்பளத்திற்காக, பிஎஸ்என்எல் நிர்வாகம் ஒதுக்கிய தொகையினை முறையாக தொழிலாளர்களுக்கு வழங்கப்பட்டுள்ளதா என்பது குறித்து விசாரணை நடத்த வேண்டும் ஆகிய கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்களுடன் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

Views: - 1

0

0