தேசிய நெடுஞ்சாலையில் தீ பிடித்து எரிந்த கார்: லேசான காயங்களுடன் உயிர் தப்பிய 5 பேர்

27 September 2020, 7:55 pm
Quick Share

திருச்சி: சமயபுரம் அருகே இருங்களூர் பகுதியில் சென்னை திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் வந்த கார் சாலையின் நடுவே உள்ள தடுப்பு சுவரில் மோதியதில் கார் கவிழ்ந்து தீ பிடித்து எரிந்து சாம்பலாயின.

சென்னை கீழ்பாக்கத்திலிருந்து பாஸ்கர், லார்வின் உள்ளிட்ட 5 பேர் காரில் மதுரை நோக்கி சென்றனர். கார் சமயபுரம் அருகே இருங்களூர் பகுதியில் வந்த போது அப்பகுதியில் உள்ள பிரிவு சாலையின் குறுக்கே இருசக்கர வாகனத்தில் இருவர் வந்தனர். அவர்கள் மீது கார் மோதாமல் இருக்க காரை திருப்பிய போது , சாலையின் தடுப்பு சுவரில் மோதி கார் கவிழ்ந்த்து. காரிலிருந்தவர்கள் 5 பேரும் லேசான காயங்களுடன் உயிர் தப்பினார்கள். காயமடைந்தவர்கள் இருங்களூர் பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இந்நிலையில் சாலையில் கவிழ்ந்து கிடந்த கார் திடீரென தீப்பற்றி எரிந்த்து. சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்பு படை வீரர்கள் தீ மேலும் பரவாமல் தடுக்க தீயிணை அனைத்தனர். இதனால் சென்னையிலிருந்து திருச்சி செல்லும் சாலையில் போக்குவரத்து சுமார் 20 நிமிடம் பாதிக்கட்டது. சம்பவம் குறித்து சமயபுரம் போலீஸார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Views: - 5

0

0